Home /News /entertainment /

அந்த நடிகையுடன் 3வது திருமணமா? ஒரே போஸ்டில் விளக்கம் கொடுத்த சூப்பர் சிங்கர் நடுவர்!

அந்த நடிகையுடன் 3வது திருமணமா? ஒரே போஸ்டில் விளக்கம் கொடுத்த சூப்பர் சிங்கர் நடுவர்!

எஸ்.பி சரண்

எஸ்.பி சரண்

இவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என பாசிடிவ் கமெண்டுகளும் வைரலாக தொடங்கின.

    மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் மகனும் பாடகருமான எஸ்.பி. சரணுக்கு 3வது திருமணம், அதுவும் பிரபல நடிகை சோனியா அகர்வாலுடன் என பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எஸ்.பி சரண். `

    எஸ்.பி சரண் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இது தவிர வெப் சீரிஸ் ஒன்றையும் இயக்கி வருகிறார். அப்பாவை போலவே இசை, பாடலில் கவனம் செலுத்தி வந்தவர் தனது நண்பர்கள் பிரேம் ஜி, வெங்கட் பிரபு, ஜெய்யுடன் சேர்ந்து சென்னை 28 மற்றும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். எஸ்.பி.பியின் மறைவுக்கு பின்பு எஸ்.பி சரணின் ஒவ்வொரு நகர்வும் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு எஸ்.பி சரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை சோனியா அகர்வாலுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து இருந்தார்.

    வீட்டுக்கு வந்த ஜனனிக்கு சக்தி கொடுத்த பேரதிர்ச்சி..எதிர் நீச்சல் சீரியலில் முக்கிய திருப்பம்!

    அதற்குள் சோனியா அகர்வாலுடன் எஸ்பி சரணுக்கு திருமணம் என்ற வதந்தி இணையத்தில் பரவ தொடங்கி விட்டது. இணையதளங்களிலும் வதந்திகள் செய்திகள் ஆகின. சரணுக்கு ஏற்கெனவே 2 திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது.அதே போல் சோனியா அகர்வாலும் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து விவாகரத்து பெற்று விட்டார். இந்நிலையில் இவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என பாசிடிவ் கமெண்டுகளும் வைரலாக தொடங்கின.

    பெண் குழந்தை பிறந்தது.. ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தாமரை!

    ஆனால் அந்த செய்தி உண்மையில்லை அது வெறும் வதந்தி என்பதை விவரிக்கும் விதமாக மற்றொரு போஸ்ட் மூலம் எஸ்.பி சரண் விளக்கm அளித்துள்ளார். அதாவது குக் வித் கோமாளி சந்தோஷ் பிரதாப், நடிகை அஞ்சலி, சோனியா அகர்வால் நடிக்கும் வெப் தொடரில் சரணும் நடிக்கிறார்.




    அதில் சோனியா அகர்வாலுக்கு ஜோடியாக எஸ்.பி சரண் நடிக்க அந்த புகைப்படத்தை தான் சரண் இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார். அதற்குள் வதந்தி பரவ, இப்போது வெப் தொடரில் நால்வரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எஸ்.பி சரண்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Spb, TV series, Vijay tv, Viral

    அடுத்த செய்தி