ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் தெரியுமா?

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் தெரியுமா?

பிக்பாஸ்

பிக்பாஸ்

டான்ஸ் மாஸ்டர் சாந்தி, அசல், ஷெரினா, மகேஸ்வரி மற்றும் நிவாஷினி ஆகியோரை தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறப்போகிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா, மகேஸ்வரி மற்றும் நிவாஷினி ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் மீதம் உள்ள 15 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வார கேப்டனாக மைனா நந்தினி வெற்றிபெற்ற நிலையில், இந்த வார எலிமினேஷனுக்காக தனலட்சுமி, அசீம், கதிரவன், மணிகண்டன், அமுதவாணன், ஆயிஷா மற்றும் ராபர்ட் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இந்த வாரத்திற்கான டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் பிக்பாஸ் வீடு இந்த வாரம் பிக்பாஸ் நீதிமன்றமாக மாறியுள்ளது. போட்டியார்கள் ஒவ்வொருவராக வந்து கேமெரா முன்பு தங்களது புகார்களை தெரிவித்து யார் தங்களுக்காக வாதாட வேண்டும் என்பதையும் தெரிவிக்குமாறு கூறப்பட்டது.

Also read... ''படுக்கையறையில் கூட'' நாக சைத்தன்யாவின் முதல் மனைவி குறித்து பேசிய சமந்தா.. வைரலாகும் வீடியோ!

எப்போது போட்டியாளர்கள் இடையே டாஸ்கில் சண்டைகள் ஏற்படும். ஆனால் இந்த வாரம் முழுவதும் சண்டைகளை தெளிவுபடுத்தவே டாஸ்க் வைத்தது போல் இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறப்போவது என்பதுகுறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் அடிப்படையில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் சரியாக பங்கேற்காத நபராக வீட்டில் உள்ள ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட ராபர்ட் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil 6