Home /News /entertainment /

சன் டிவி-யின் பிரபல சீரியலில் சோனியா அகர்வால்! ரசிகர்கள் உற்சாகம்!

சன் டிவி-யின் பிரபல சீரியலில் சோனியா அகர்வால்! ரசிகர்கள் உற்சாகம்!

சோனியா அகர்வால்

சோனியா அகர்வால்

பூவே உனக்காக சீரியலில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகை ஒருவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, நடிகை சோனியா அகர்வால் தான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சன் டிவி-யின் பூவே உனக்காக சீரியலில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகை சோனியா அகர்வால்.

    தமிழ் சேனல்களில் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பது சீரியல்கள் தான். ரியாலிட்டி ஷோக்கள் ஒரு பக்கம் சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தினாலும், மீதி நேரங்களில் சேனல்களுக்கு துணை நிற்பவை சீரியல்களே. பிரபல முன்னணி தமிழ் சேனலாக உலக தமிழர்களிடையே புகழ் பெற்றிருக்கும் சன் டிவி-யில் நாள் முழுவதும் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில் பிரைம் டைமிங்கில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களின் அமோக ஆதரவு உள்ளது.

    சன் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல் பூவே உனக்காக. இந்த சீரியலில் பூவரசி கேரக்டரில் ஹீரோயினாக நடிகை ராதிகா ப்ரீத்தி நடித்து வந்தார். சமீபத்தில் அவர் விலகியதையடுத்து, தற்போது பூவரசியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கதிரவன் என்ற கேரக்டரில் பிரபல சின்னத்திரை நடிகர் அசீம் நடித்து வருகிறார். முன்னதாக கதிரவன் கதாபாத்திரத்தில் அருண் நடித்து வந்தார். பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் அதிலிருந்து விலகினார்.

    சாதனைப் படைத்த விஜய் டிவி முத்தழகு சீரியல்!

    அதே போல் பூவே உனக்காக சீரியலில், பூவரசியின் தோழியாக கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா. பின்னர் மேற்படிப்பை தொடர்வதாக அத்தொடரிலிருந்து விலகினார். பின்னர் சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அருவி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

    அடேங்கப்பா... பென்ஸ் காரை பரிசளித்த ஆல்யா மானசா சஞ்சீவ் ஜோடி - யாருக்குன்னு பாருங்க!

    இந்நிலையில் தற்போது பூவே உனக்காக சீரியலில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகை ஒருவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, நடிகை சோனியா அகர்வால் தான். வரும் ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் 1 மணி நேர ஸ்பெஷல் எபிசோடில் முக்கிய திருப்பம் தரும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் சோனியா அகர்வால். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.



    செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் சோனியா அகர்வால், ஒரு காலத்தில் கனவுக் கன்னியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி