Home /News /entertainment /

6 மாசம் தான்பா ஆகுது... சோகத்தில் சினேகன் மனைவி கன்னிகா!

6 மாசம் தான்பா ஆகுது... சோகத்தில் சினேகன் மனைவி கன்னிகா!

சினேகன் மனைவி கன்னிகா

சினேகன் மனைவி கன்னிகா

, சினேகன் வெற்றியோட திரும்புவார், தவறவிட்ட வெற்றியை கைப்பற்றவே மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார், தைரியமாக இருங்க என்று ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

  வழக்கத்தை விட கூடுதல் சுவாரசியமாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் தொடங்கி உள்ளது. 24 மணி நேரத்தில் நடந்ததை சுருக்கி 1 மணி நேரம் போட்டு காட்டியதற்கே சுவாரசியம் 'டாப் கியர்' போட்டு தூக்கியது; இப்போ 24 மணிநேரமும் நடந்ததை நடந்தபடியே ஒளிபரப்பினால் எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்!

  பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்து கிடந்த ரசிகர்களுக்கு எது கிடைத்ததோ இல்லையோ - என்னப்பா இப்படி தம் அடிக்கிறாங்க? காண்டம் பத்திலாம் கூட பேசுறாங்கனு பல ஷாக்குகள் கிடைத்தது, குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகைகளுக்கு!

  சர்ச்சைகள் ஒருபக்கம் இருக்க, காதல் வயப்படுவதற்கு பெயர் போன பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஒரு பெண் காதல் சோகத்தில் மூழ்கி உள்ளார்.ஆனால் அவர் ஒரு போட்டியாளர் அல்ல, தன் கணவரை ஒரு போட்டியாளர் ஆக அனுப்பி வைத்த ஒரு காதல் மனைவி ஆவார், அது வேறு யாரும் இல்லை கவிஞர் சினேகனின் மனைவி கன்னிகா.

  நினைவூட்டும் வண்ணம் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் திரைப்பட பாடலாசிரியர் சினேகன். பெரிய அளவில் முகம் தெரியாத ஒரு நபராக இருந்த சினேகன் இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நபரானார். எவ்வளவு பிரபலம் என்றால்? - முதல் சீசனின் இரண்டாம் இடத்தை பிடித்தார். சீசன் 1-இல் ஆரவ் வின்னராக, அதை தொடர்ந்து சினேகன் ரன்னர் அப் ஆனார்.

  இதையும் படிங்க.. முன்னாள் காதலி பற்றி நாமினேஷனில் ஓபனாக பேசிய நிரூப் நந்தகுமார்!

  பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி முடிந்த பின்னர், தான் எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்த கன்னிகா என்கிற நடிகையை சினேகன் திருமணம் செய்து கொண்டார். குறிப்பிடத்தக்க வகையில் சினேகன் - கன்னிகா திருமணம் நடிகர் கமல் ஹாசனின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் தான் திருமணத்திற்கு பின்னர் தனது காதல் மனைவியான கன்னிகாவை பிரிந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் கவிஞர் சினேகன்.

  இது குறித்து கன்னிகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் சினேகன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு கிளம்ப தயார் ஆகும் காட்சியையும், அதற்காக கன்னிகா அவருக்கு தேவையான பொருட்களை எடுத்து பெட்டியில் வைக்கும் காட்சியையும் பார்க்க முடிகிறது.   
  View this post on Instagram

   

  A post shared by Kannika Ravi (@kannikaravi)


  இந்த போஸ்ட்டிற்காக கன்னிகா தன் கணவர் எழுதிய பாடல் வரிகளையே கேப்ஷன் ஆக இட்டுள்ளார். குறிப்பிட்ட பாடல் வரிகள் ஆனது, ஏப்ரல் மாதத்தில் என்கிற திரைப்படத்தில் வரும் "பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை" என்கிற பாடலில் வரும்...

  இதையும் படிங்க.. மீண்டும் வந்த ‘4 மணி ஷிவானி’.. அந்த ஃபோட்டோவை பார்த்தீங்களா?

  "உன் பிரிவை நான் என்றும் தாங்கி கொள்ள
  உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
  எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல ?
  என் உள்ளம் தடுமாறுதே... ஓ வோ
  கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
  காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்
  கையொப்பமாய் நம்மை தாங்கும் மனம் சொல்லுமே.." என்கிற வரிகளே ஆகும்.

  கன்னிகாவின் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் கன்னிகாவின் ரசிகர்கள் பலரும், சினேகன் வெற்றியோட திரும்புவார், தவறவிட்ட வெற்றியை கைப்பற்றவே மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார், தைரியமாக இருங்க என்று ஆறுதல் கூறியும் வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Vijay tv

  அடுத்த செய்தி