Home /News /entertainment /

என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த சினேகன் முயற்சிக்கிறார் - நடிகை ஜெயலட்சுமி

என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த சினேகன் முயற்சிக்கிறார் - நடிகை ஜெயலட்சுமி

ஜெயலட்சுமி - சினேகன்

ஜெயலட்சுமி - சினேகன்

பாஜக கட்சியிலும், சினிமா துறையிலும் தான் புகழ் பெற்று இருப்பதால் தன் மீது களங்கம் ஏற்படுத்தி சினேகன் அதன் மூலம் புகழ் தேட விரும்புகிறார் என ஜெயலட்சுமி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சினிமா பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் நிர்வாகியுமான சினேகன் சென்னை காவல் ஆணையரகத்தில் "சினேகம் பவுண்டேஷன்" என்ற தனது அறக்கட்டளை பெயரில் நடிகை ஜெயலட்சுமி இணையதளம் மற்றும் சமூக வலைதள கணக்குகள் தொடங்கி பொதுமக்களிடம் பணம் வாங்கி வருவதாகவும், இதனால் தனக்கும் தன்னுடைய அறக்கட்டளைக்கும் களங்கம் ஏற்பட்டு வருவதாகவும் கடந்த 5-ம் தேதி புகாரளித்தார்.

அப்போது பேசிய அவர், தான் 2015-ஆம் ஆண்டு பதிவு செய்து "சினேகம் பவுண்டேஷன்" என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருவதாகவும் அதன் மூலம் எண்ணற்றோருக்கு நற்செயல்கள் செய்து வருவதாகவும் தெரிவித்தார். சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய நண்பர்கள் தன்னுடைய பெயரில் இணையதளம் மற்றும் சமூக வலைதள கணக்குகள் மூலம் பொது மக்களிடம் நடிகை ஜெயலட்சுமி படம் கேட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும், அதற்கடுத்த சில தினங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் பணம் பெறுவதால் தன்னிடம் விசாரணை செய்வதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தான் விசாரணை மேற்கொண்டதாகவும் அப்போது தன்னுடைய "Sneham Foundation" என்ற பெயரில் நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அறக்கட்டளை என்ற பெயரில் பொது மக்களிடம் பணம் வாங்கி வருகிறார் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்ள முகவரியை இரண்டு முறை சட்டபூர்வமாக விளக்கம் கேட்டு கடிதம் எழுதியும், எந்தவித பதிலும் தரவில்லை எனவும் மேலும் அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது தன்னை தனியாக சந்திக்க வேண்டும் என அவர்கள் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியை சென்று ஆய்வு செய்தபோது அங்கு அப்படி ஒரு அலுவலகமே இயங்கவில்லை என்பது தெரிய வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், நடிகை ஜெயலட்சுமி தன்னுடைய மகள் பெயரில் வங்கி கணக்குகளை இணையதளத்தில் பதிவிட்டு அதன்மூலம் பொதுமக்களிடம் பணம் பெற்று வருவதும் தெரிய வந்ததாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி தனது அறக்கட்டளையின் பெயருக்கோ தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரகத்தில் புகார் அளித்ததாக பாடலாசிரியர் சினேகன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தனது மீதும் தான் நடத்திவரும் அறக்கட்டளை மீதும் அவதூறு பரப்பிவரும் பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நடிகையும் பா.ஜ.க பிரமுகருமான ஜெயலெட்சுமி காவல் ஆணையரக்கத்தில் இன்று புகாரளித்தார்.

சினேகன் மீது புகார் அளித்த ஜெயலட்சுமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், கடந்த 2018 முதல் தான், "சிநேகம் பவுண்டேஷன்" என்ற அறக்கட்டளையை நடத்தி வருவதாகவும், இதன்மூலம் பொதுமக்கள் யாரிடமும் தான் பணம் வாங்கி மோசடி செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "சினேகம் பவுண்டேஷன்" குறித்து சினேகன் விளக்கம் கேட்டு தனக்கு எந்தவிதமான கடிதமும் அனுப்பவில்லை எனவும், தான் அவரை காபி ஷாப்பில் காபி குடிக்க வேண்டும் என்று கூறவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சினேகம் பவுண்டேஷன் மூலம் தான், தனது சொந்த பணத்திலேயே பல நற்பணிகளை செய்து வருவதாகவும், பாஜக கட்சியிலும், சினிமா துறையிலும் தான் புகழ் பெற்று இருப்பதால் தன் மீது களங்கம் ஏற்படுத்தி சினேகன் அதன் மூலம் புகழ் தேட விரும்புகிறார் எனவும் ஜெயலட்சுமி தெரிவித்தார்.

எனவே, தன் மீதும் தான் நடத்தி வரும் சினேகம் பவுண்டேஷன் மீதும் அவதூறு பரப்பி வரும் பாடல் ஆசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Published by:Shalini C
First published:

அடுத்த செய்தி