ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிவசங்கர் மாஸ்டர் பற்றி சொல்ல பல விஷயங்கள் இருக்கு.. இறப்புக்கு பின் பகிரும் சீரியல் நடிகர்

சிவசங்கர் மாஸ்டர் பற்றி சொல்ல பல விஷயங்கள் இருக்கு.. இறப்புக்கு பின் பகிரும் சீரியல் நடிகர்

சிவசங்கர் மாஸ்டர்

சிவசங்கர் மாஸ்டர்

சிவசங்கர் மாஸ்டரும் நானும் ஒன்றாக அமர்ந்து மணிக்கணக்கில் பல விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறோம்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் எண்ணற்ற பாடல்களுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்தவர் தான் மாஸ்டர் கே. சிவசங்கர். இவர் நடன இயக்குனராக மட்டுமின்றி ஒரு சிறந்த நடிகராகவும் சினிமாவில் தனது முத்திரையை பதித்தார். அப்படிப்பட்ட ஜாம்பவான் சமீபத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சிவசங்கர் மாஸ்டர் மற்றும் அவரது மனைவி மூத்த மகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள AlG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததால், சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தனது அப்பாவுக்கு உதவும்படி சிவசங்கர் மாஸ்டரின் மகன் வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு உதவி முன்வந்தனர். ஆனால், கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த நடன மாஸ்டர் சிவசங்கர் மாரடைப்பால் காலமானார். 800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சிவசங்கர் மாஸ்டர், ‘மகதீரா’ படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். சிவசங்கர் மாஸ்டர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'இதயத்தை திருடாதே' தொடரில் நடன இயக்குநராக சில எபிசோட்கள் நடித்திருந்தார். இந்த நிலையில் சிவசங்கர் மாஸ்டருடன் நடித்த அனுபவம் குறித்து இதயத்தை திருடாதே சீரியல் நடிகர் நவீன் பகிர்ந்துகொண்டார். அதில், மூத்த கலைஞர் என்றாலும் அவரிடம் எந்த பந்தாவும் இல்லை. மிகவும் எளிமையான மனிதர். சீரியல் கதையை பொறுத்தவரை நான் அவரை அடிக்கப் போவதை போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

வயதில் மூத்தவரிடன் அவ்வாறு நடந்துகொள்ள எனக்கு தயக்கம் அதிகம் இருந்தது. ஆனால் அவர் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. "இது நடிப்புதான் கண்ணு ஒண்ணுமில்லை நீ சும்மா பண்ணு" என்று சொல்லுவார். சிவசங்கர் மாஸ்டர் உடன் ஒர்க் பண்ண வேண்டும் என்கிற ஆசை எனக்கு ரொம்ப நாளாக இருந்தது. சீரியல் மூலமா அந்த வாய்ப்பு அமைந்ததன் மூலம் மகிழ்ச்சியடைந்தேன். மொத்தம் 10 நாட்கள் அவருடன் பணிபுரிந்தேன்.

மாஸ்டருடன் நவீன்

இருவரும் ஒன்றாக அமர்ந்து மணிக்கணக்கில் பல விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறோம். நான் கட்டாயம் சினிமாவில் நடிப்பேன். அந்த படத்திற்கு நீங்கள் தான் கோரியோகிராப் பண்ண வேண்டும் சார் என்று கேட்டதற்கு கூட, காட்டாயம் பண்ணலாம் என்று சொன்னார். அவர் இறந்தபோது நான் வெளியூரில் ஷூட்டிங்கில் இருந்ததால் அவர் முகத்தை கடைசியாக பார்க்க முடியவில்லை.

ஆனால், அவரது சிரித்த முகம் இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது. அவர் நடன இயக்குனர் மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த நடிகரும் கூட. டைமிங் காமெடி அடிப்பதில் அவரை மிஞ்ச முடியாது. அவரது மறைவை காட்டாயம் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நல்ல மனிதரை நாம் இழந்துவோட்டோம். அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என நான் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்" என நடிகர் நவீன் கூறியுள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்