டான்சிங் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, சிங்கிங் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது ஏதாவது ஒரு திரைப்படத்தின் ப்ரோமோஷன் ஆக இருந்தாலும் சரி, அவ்வளவு ஏன்? 'நீயா நானா' போன்ற மிகவும் சென்சிடிவ் ஆன நிகழ்ச்சிகளில் கூட காமெடியை கொண்டு வந்து 'ஃபன்' செய்ய தவறுவதில்லை - நம்ம விஜய் டிவி சேனல்!
எல்லாவற்றையும் காமெடியாக கொண்டு போவதில் எந்த தவறும் இல்லை என்கிற விஜய் டிவியின் சொந்த கான்செப்டிற்கு கிடைத்த ஆகப்பெரிய வெற்றிதான் - குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. ஒரு குக்கிங் ஷோவை எந்த அளவிற்கு காமெடியாக கொண்டு செல்ல முடியுமோ, அதை விட ஒருபடி மேலே சென்று, எவராலும் தவிர்க்க முடியாத ஒரு ஷோவாக உருவாகி, பலதரப்பிலான டிவி ரசிகர்களின் ஃபேவரைட் ஷோவானது - குக்கு வித் கோமாளி!
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஆனது, நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாம் சீசன்கள் அளவிற்கு ஒரு அல்டிமேட் ஆன சீசனாக இல்லை என்றாலும், ஆரம்பத்தில் கொஞ்சம் 'போர்' அடித்தாலும் கூட, 'வைல்ட் கார்டு என்ட்ரி' உட்பட பல மேட்டர்களை உள்ளே கொண்டு வந்து "ஆட்டம்" தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதற்கிடையில், விஜய் டிவி ப்ராடெக்ட்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் 'கெஸ்ட்' ஆக கலந்துகொண்டுள்ளார்.
ஏன்? எதற்காக? என்கிற கேள்விகளுக்கான பதில்களை நம்மில் பலரும் அறிவோம். வேறு எதற்காக? திரைப்பட ப்ரோமோஷனுக்காக தான். ஆம்! வருகிற மே 13 ஆம் தேதியன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'டான்' திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. திரைப்படம் சார்ந்த ப்ரோமோஷன்களில் தீயாக வேலைசெய்து வரும் 'டான்' படக்குழு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளது.
Also Read : வருங்கால மனைவி பென்ஸியுடன் குக் வித் கோமாளி புகழின் லேட்டஸ்ட் படம்!
இதற்கு முன்னதாக குக்கு வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் தங்களது திரைப்படத்தை ப்ரோமோஷன் செய்ய நிறைய பிரபலங்கள் வந்துள்ளனர். தற்போது அந்த பட்டியலில் சிவகார்த்திகேயனும் இணைந்து உள்ளார். இது தொடர்பான ஒரு புகைப்படம் விஜய் டிவி ரசிகர்கள் மற்றும் எஸ்கே ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. சிவகார்த்திகேயன் உடன் வேறு எந்தெந்த டான் திரைப்பட பிரபலங்கள் வந்துள்ளார்கள் என்பது பற்றி கூடுதல் விவரங்கள் இல்லை என்றாலும் கூட, அது தொடர்பான ஒரு ப்ரோமோ வீடியோ கூடிய விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
Also Read : இந்தி நல்ல மொழி... இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்... நாம் அதை கற்றுக் கொள்ள வேண்டும் - சுஹாசினி மணிரத்னம்
அறியாதோர்களுக்கு, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள டான் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார், அனிருத் இசையமைத்து உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் உடன் சிவாங்கி, பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.