• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விரைவில் சன் டிவி-யில் ’டாக்டர்’ திரைப்படம் - எப்போது தெரியுமா?

விரைவில் சன் டிவி-யில் ’டாக்டர்’ திரைப்படம் - எப்போது தெரியுமா?

செல்லம்மா பாடல்

செல்லம்மா பாடல்

தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் அரபு நாடுகளிலும் முதல் இரண்டு நாட்களில் தலா ஒரு கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது டாக்டர்.

  • Share this:
    தீபாவளி விருந்தாக சன் தொலைக்காட்சியில் டாக்டர் திரைப்படம் ஒளிபரப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான டாக்டர் திரைப்படம், மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பீஸ்ட் படத்தை இயக்கி வரும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இந்தப் படத்தின் இயக்குநர். பல போராடங்களுக்குப் பிறகு வெளியான இந்த திரைப்படம், நேரடியாக திரையரங்குகளிலேயே வெளியானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் பெரிய நடிகரின் திரைப்படம் என்பதால், ஏகபோக எதிர்பார்ப்பு இருந்தது. அதை கொஞ்சமும் ஏமாற்றாமல் காட்சிக்கு காட்சி நகைச்சுவையை வைத்ததோடு, குடும்பங்கள் கொண்டாடும் விதமாக திரைக்கதையையும் சுவாரசியமாக அமைத்துள்ளனர். இதனால் ரசிகர்கள் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    முதல் காட்சியில் இருந்தே இப்படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததன் விளைவாக அடுத்தடுத்த காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக மாறி இப்படம் ஓடும் திரையரங்குகளை திருவிழாக்கோலம் காண செய்துள்ளது. முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 8.20 கோடி ரூபாய் இப்படம் வசூல் செய்துள்ளதன் மூலம் இந்த ஆண்டு மாஸ்டர், கர்ணன் படங்களுக்கு பின் அதிக ஓபனிங் பெற்ற படம் எனும் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளது. மேலும் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து இப்படம் பிரம்மாண்ட வெற்றியை அடைந்துள்ளது.

    தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் அரபு நாடுகளிலும் முதல் இரண்டு நாட்களில் தலா ஒரு கோடி ரூபாயை வசூல் செய்துள்ள இப்படம் அமெரிக்காவில் முதல் நாள் வசூலில் விஜய்யின் மாஸ்டர் படத்தையும் மிஞ்சி அசத்தியுள்ளது. மேலும் இந்த வாரம் ஆயுதபூஜை சிறப்பு விடுமுறை வருவதால் இப்படம் கூடுதலாக வசூல் செய்து சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    மொத்தத்தில், ஓடிடியின் அசுர வளர்ச்சிக்கு பின் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள டாக்டர் திரைப்படம், நல்ல படம் வந்தால் நிச்சயம் ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுப்பார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்துள்ளது. இப்படியான அமோக வரவேற்பை பெற்றுள்ள டாக்டர் படத்தை, தீபாவளி விருந்தாக, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதே நாளில் சன்நெக்ஸ்டில் ஒளிபரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை டாக்டர் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பானால் டி.ஆர்.பி ரேட்டிங் தாறுமாறாக உயரும். இந்தப் படத்தில் சிவகார்த்திகயேனுடன் இணைந்து பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அனிரூத் இசையமைத்துள்ளார். ஆர்.ஜே ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, எஸ்.கே புரொடெக்ஷன் தயாரித்துள்ளது. யோகிபாபு உள்ளிட்டோர் காமெடியில் கலக்கி உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: