Home /News /entertainment /

சிவகாமி அம்மாவா இப்படி? சந்தியா சரவணனுக்கு அடுத்த பிரச்சனை ரெடி!

சிவகாமி அம்மாவா இப்படி? சந்தியா சரவணனுக்கு அடுத்த பிரச்சனை ரெடி!

ராஜா ராணி 2

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியலில் இப்போது முக்கிய கட்டம். சந்தியாவை ஐபிஎஸ் படிக்க வைப்பதில் சரவணன் உறுதியாக இருக்கிறார்

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்து விடுகின்றன. அதில் குறிப்பிடும்படியான சீரியல் என்றால் ராஜா ராணி சீசன் 2. இந்த சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. எப்போதுமே பரபரப்பாக செல்லக்கூடிய சீரியல்கள் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது ராஜா ராணி தான். வார வாரம் சந்தியாவை எதாவது ஒரு பிரச்சனையில் மாட்டிவிடுவார் அர்ச்சனா. ஆனால் உண்மை தெரியாமல் சந்தியாவை திட்டி தீர்ப்பார் மாமியார் சிவகாமி. அந்த உண்மையை கண்டுப்பிடிப்பதே சந்தியாவின் வேலை. உண்மை தெரிந்தால் கூட அதை மாமியார், கணவர் என யாரிடமும் சொல்ல மாட்டார். அதே போல் வில்லி அர்ச்சனா திருந்தாமல் தொடர்ந்து எதாவது சூழ்ச்சி செய்து கொண்டே இருப்பார்.

    இப்படியே சென்றுக் கொண்டிருந்த சீரியலில் இப்போது முக்கிய கட்டம். சந்தியாவை ஐபிஎஸ் படிக்க வைப்பதில் சரவணன் உறுதியாக இருக்கிறார். இந்த சீரியல் இந்தியில் ஒளிபரப்பான 'தியா அவுர் பாதி ஹம்' என்ற கதையின் தமிழாக்கமாக என்பதால் திரைக்கதை அச்சு அசலாக அப்படியே பயணிக்கிறது. எப்படியாவது ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என கனவுடன் இருந்த நாயகி எதிர்பாராதவிதமாக திருமண பந்தத்தில் நுழைவதும், குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கும் படிப்பறிவு இல்லாத நாயகன் மனைவியை படிக்க வைப்பது தான் கதையே.

    இதையும் படிங்க.. இனிமேல் என்னை வெறுப்பீர்கள்.. பிரபல சின்னத்திரை நடிகையின் ஷாக்கிங் பதிவு!

    இப்போது ராஜா ராணி 2வில் அந்த கதையோட்டம் தான் ஒளிப்பரப்பாகி வருகிறது. சந்தியாவை ஐபிஎஸ் படிக்க வைப்பது பற்றி சரவணன் மொத்த குடும்பத்தினரிடமும் பேசி விட்டார். ஆனால் யாருக்குமே அதில் விருப்பமில்லை. குறிப்பாக மாமியார் சிவகாமி போலீஸ் என்றாலே ஆகாது என்கிறார்.

    இதையும் படிங்க.. சரஸ்வதிக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி.. தமிழ் இப்படி செய்யலாமா?

    ஆனால் சரவணன் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். எப்போதுமே எதாவது பிரச்சனை என்றவுடன் கத்தி, கூச்சல் போட்டு, அழுது, ஆர்பாட்டம் செய்யும் சிவகாமி அம்மா, முதன்முறையாக சந்தியாவை கோயிலுக்கு தனியாக அழைத்து சென்று இதை பற்றி பேசுகிறார்.



    அவரின் பேச்சில் இருக்கும் பயத்தை புரிந்து கொள்ளும் சந்தியா, ஐபிஎஸ் கனவு வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார். ஆனால் சரவணன் தனது பேச்சில் நிலையாக நிற்கிறார். அதுமட்டுமில்லை, சந்தியாவிடம் ,மொத்த உலகமே எதிர்த்தாலும் உங்களை ஐபிஎஸ் படிக்க வைப்பேன் என சத்தியம் செய்கிரார். இதுக் குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி