• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sivaangi: கலைமாமணி விருதால் சிவாங்கி வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம்!

Sivaangi: கலைமாமணி விருதால் சிவாங்கி வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம்!

சிவாங்கி கிருஷ்ணகுமார்

சிவாங்கி கிருஷ்ணகுமார்

சிவாங்கியின் அம்மா பின்னி கிருஷ்ணகுமார், பிரபல கர்நாடக சங்கீத பாடகி.

  • Share this:
    விஜய் டிவி அதன் ரியாலிட்டி ஷோக்களுக்கு மிகவும் பிரபலமானது. அந்தப் பட்டியலில் முதலிடம் வகிப்பது நிச்சயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியாக தான் இருக்க வேண்டும். தற்போது இந்நிகழ்ச்சியின் 2-ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

    இதில் குக்குகளும் கோமாளிகளும் செய்யும் ரகளைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் குக்குகளுக்கும், கோமாளிகளுக்கும் தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன. அவர்களில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சிவாங்கி. அவரது அழகான நகைச்சுவை உணர்வும், குரல் வளமும் ரசிகர்களை மகிழ்விக்க ஒருபோதும் தவறவில்லை. தவிர, அவர் சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகமாக இருக்கிறார்.




    சிவாங்கியின் அம்மா பின்னி கிருஷ்ணகுமார், பிரபல கர்நாடக சங்கீத பாடகி. ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ‘ரா ரா’ என்ற பாடலை பாடியவர். தற்போது அவருக்கும் அவரது கணவர் கிருஷ்ணகுமாருக்கும் தமிழக அரசின் மதிப்புமிக்க கலைமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை சிவாங்கியின் அம்மா பின்னி கிருஷ்ணகுமார் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: