Home /News /entertainment /

Sivaangi: பிரபல எஃப்எம்-ல் ஆர்.ஜே-வான சிவாங்கி! அதுவும் அவார்டோடு...

Sivaangi: பிரபல எஃப்எம்-ல் ஆர்.ஜே-வான சிவாங்கி! அதுவும் அவார்டோடு...

சிவாங்கி

சிவாங்கி

கடந்த 2019-ஆம் ஆண்டில், ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் பங்குகொண்ட சிவாங்கி, இசை பிரியர்களுக்கும் மட்டுமே பரீட்சயமானார்.

  கடந்த 2019-ஆம் ஆண்டில், ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் பங்குகொண்ட சிவாங்கி, இசை பிரியர்களுக்கும் மட்டுமே பரீட்சயமானார். அதன் பிறகு 2020-ஆம் ஆண்டில் காமெடி-குக்கிங் ஷோவான குக்கு வித் கோமாளியில் கலந்து கொண்ட சிவாங்கி, ஒரு க்யூட்டான கோமாளியாக கலக்கி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமே பரிச்சயமானார்.

  சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்னரே, அதாவது 2009-ஆம் ஆண்டுலேயே 'பசங்க' திரைப்படம் வழியாக  பாடகியானார் சிவாங்கி. குறிப்பிட்ட படத்தில் "அன்பாலே அழகும்" என்கிற பாடலை பாடியது சிவாங்கி தான் என்பது இன்றும் பலருக்கும் தெரியாது. தன் இசைத்திறனால் வெளியுலகத்திற்கு பெரிதும் தெரியாமல் போன சிவாங்கிக்கு விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவான 'குக் வித் கோமாளி' ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சிவாங்கிக்கு "வேற லெவலில்" ரசிகர்கள் சேர்ந்தனர்.

  சிவாங்கி, எந்த அளவிற்கு பிரபலமானார் என்றால்? இந்தியாக்ளிட்ஸ் வலைத்தளத்தால் "2020 ஆம் ஆண்டில், தொலைக்காட்சியில் மிகவும் விரும்பத்தக்க பெண்" என்று பட்டியலிடப்படும் அளவிற்கு பிரபலமடைந்தார். மிகவும் சிரமமான பாடல்களை கூட மிகவும் அசாதாரணமாக பாடும் திறமையோடு சேர்ந்த அப்பாவித்தனமும், வெகுளித்தனமும் தான் சிவாங்கியை இந்த உச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

  இந்தியாக்ளிட்ஸ் மட்டுமின்றி பிளாக் ஷீப் மற்றும் பிஹைண்ட்வுட்ஸ் வழியாகவும் சிவாங்கிக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைத்தது. குக் வித் கோமாளி சீசன் 2-விற்கு பிறகு, பிளாக்ஷீப் டிஜிட்டல் அவார்ட்ஸில் 'தி என்டர்டெயின்னிங் ஸ்டார் ஃபீமேல் விருதும், பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான்ஸில் ரியாலிட்டி டெலிவிஷனில் மிகவும் பிரபலமான பெண் என்கிற விருதும் பெற்றார் சிவாங்கி. தற்போது குக் வித் கோமாளி சீசன் 3-ல் கலக்கி கொண்டிருக்கிறார்.

  இந்நிலையில் ரேடியோ சிட்டி எஃப்எம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது, சிவாங்கி ஒரு க்யூட் ஆன ஆர்.ஜே வாக மாறிய சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது, அது தொடர்பான ஒரு குட்டி வீடியோவை சிவாங்கி தன் யூட்யூப் சேனலில் (சிவாங்கி கிருஷ்ணகுமார் சேனலில்) பகிந்துள்ளார்.

  இயக்குநர் பாலா போட்ட கட்டளை... ஏற்க மறுத்த செம்பருத்தி சீரியல் நடிகை!

  அந்த வீடியோவில், ரேடியோ சிட்டி எஃப்எம்-ன் ஆர்.ஜே பரத், "அடுத்ததாக பாட்டு வருதுனு தான் நாங்க சொல்லுவோம், ஆனா அந்த பாட்டை பாடிய சிவாங்கியே எங்க கிட்ட வந்து இருக்காங்க!" என்று அறிவித்த கையோடு, சிவாங்கி வெறும் கெஸ்ட் அல்ல, ரேடியோ சிட்டியின் ஒரு ஆர்.ஜே-வாகவே மாறிவிட்டார் என்றும் குறிப்பிட்டு நிகழ்ச்சிக்கு வந்த சிவாங்கியை வரவேற்கிறார்.  அதைக்கேட்டு, குஷியின் உச்சத்திற்கே சென்ற சிவாங்கி, ஒரு ஆர்.ஜே-வை போல பேச தயாராகும் முனைப்பின் கீழ் தன் குரலை சரி செய்துகொண்டு, டேபிளில் இருக்கும் பேப்பரை எடுத்து வாசிக்க தொடங்கிய பிறகு தான் அவருக்கு ரேடியோ சிட்டியின் 'வுமன் என்டர்டெயினர் அவார்ட்' கிடைத்துள்ளது, அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள வந்துள்ளார் என்கிற விவரமே நமக்கு தெரிய வருகிறது.

  படையப்பா படத்தில் வரும் இந்த குழந்தை இன்று பிரபல சீரியல் நடிகை!

  குறிப்பிட்ட விருது வழங்கும் நிகழ்ச்சியானது ரேடியோ சிட்டி தமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒளிபரப்பப்படும் என்கிற தகவலையும் "ஒரு ஆர்.ஜே"-வாக சிவாங்கி அறிவித்து முடிக்கவும், வீடியோ முடிவடைகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: TV Serial, Vijay tv

  அடுத்த செய்தி