சிவாங்கின் சமீபத்திய இன்ஸ்டா புகைப்படத்தை பார்த்து வாவ் சொல்லாதவர்களே இல்லை எனலாம். பிங்க் நிற சேலையில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஃபோட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் சிவாங்கி.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனவர் சிவாங்கி. இசை பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடும் திறமையை வெளிப்படுத்தினார். அதற்கு அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தினார். குக் வித் கோமாளி சீசன் 2வில் அஸ்வின் - சிவாங்கி காம்போ சூப்பர் டூப்பர் ஹிட்.
அந்த கேள்விக்கு கடைசி வரை பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆன ஆல்யா - சஞ்சீவ்
அதே போல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிடைக்காத பேரும் புகழும், குக் வித் கோமாளி மூலம் சிவாங்கி வசமானது. முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் சிவாங்கி சமையலிலும் கைத்தேர்ந்தவர் ஆனார். தற்போது 3வது சீசனிலும் சிவாங்கி இருக்கிறார். இதற்கு இடையில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.
View this post on Instagram
இஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி சமீபத்தில் அட்டை படத்திற்காக ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார். பிங்க் நிற சேலையில் மாடலிங் லுக்கில் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுப்பது போல் சிவாங்கி கொடுத்து இருக்கும் போஸ் இணையத்தில் லைக்ஸ்களை குவிக்கிறது. சிவாங்கியை புடவையில் பார்பது மிகவும் அரிது, ஆனால் இந்த புடவையில் சிவாங்கி தேவதை போல் ஜொலிக்கிறார்.
சமீபத்தில் சிவாங்கியின் ஆடை குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. பலரும் சிவாங்கியை ட்ரோல் செய்து இருந்தனர். ஆனால் இந்த ஃபோட்டோ ஷூட் மொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.