ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆஹா... இந்த வாரம் ஷிவாங்கிக்கு இப்படியொரு கெட்டப்பா?... இணையத்தில் வைரலாகும் போட்டோ!

ஆஹா... இந்த வாரம் ஷிவாங்கிக்கு இப்படியொரு கெட்டப்பா?... இணையத்தில் வைரலாகும் போட்டோ!

Shivangi

Shivangi

Sivaangi | குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் செல்ல குட்டியான ஷிவாங்கிக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய கெட்டப் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் தொடங்கி டான்ஸ், பாட்டு, காமெடி, ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ என அனைத்திற்குமே தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆனால் இவர்கள் அனைவருமே ஒன்றாக என்ஜாய் செய்து பார்க்கும் நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி’யாக தான் இருக்கும். சமையல் நிகழ்ச்சியில் காமெடி கலாட்டாவை சேர்த்து வெளியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 1, 2-யைத் தொடர்ந்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில், போட்டியாளர்களாக அம்மு அமிராமி, அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், தர்ஷன், மனோபாலா, பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ராகுல் தாத்தா ஆகியோரும், கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, மூக்குத்தி முருகன், சுனிதா, அதிர்ச்சி அருண், ஷீத்தல் கிளாரின், சக்தி ராஜ், பரத் கே ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தற்போது கடந்த வாரம் வரை மனோபாலா, ராகுல் தாத்தா, அந்தோணி தாசன் ஆகிய போட்டியாளர்கள் எலிமினேட் ஆகியுள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஸ்பெஷலே கோமாளிகள் அடிக்கும் லூட்டியும், அதற்காக அவர்கள் வார வாரம் போடும் வித விதமான கெட்டப்பும் தான். ஒவ்வொரு வாரமும் கோமாளிகளுக்கு காமெடியான கெட்டப்புக்கள் கொடுக்கப்படுவது உண்டு. அப்படி இந்த வாரம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் செல்ல குட்டியான ஷிவாங்கிக்கு கொடுத்துள்ள கெட்டப் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.

Also Read : பிரபல எஃப்எம்-ல் ஆர்.ஜே-வான சிவாங்கி! அதுவும் அவார்டோடு...

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி இருந்தாலும், ஷிவாங்கிக்கு பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தால் ஷிவாங்கியை ரசிகர்கள் ‘லேடி ஷின் சான்’ என கொண்டாடி வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷிவாங்கி செய்யும் சேட்டைகளும், பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தவறே செய்தாலும் திட்டு வாங்காமல் எஸ்கேப் ஆவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


இந்த வாரம் ஷிவாங்கிக்கு வில்லு படத்தில் வடிவேலு போட்ட சூப்பர் கெட்டப்பை கொடுத்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாவில் லீக்காகி தாறுமாறு வைரலாகி வருகிறது.

First published:

Tags: Singer Shivangi, Trending