Home /News /entertainment /

உண்மை தெரிந்தும் ஆகாஷை ஏற்றுக்கொண்ட வாணி.. கல்யாணம் முடிந்தது!

உண்மை தெரிந்தும் ஆகாஷை ஏற்றுக்கொண்ட வாணி.. கல்யாணம் முடிந்தது!

சிப்பிக்குள் முத்து

சிப்பிக்குள் முத்து

சிப்பிக்குள் முத்து சீரியலில் வாணி - ஆகாஷ் திருமணம் முடிந்தது.

    சிப்பிக்குள் முத்து சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. ஒருவழியாக வாணி - ஆகாஷ் திருமணம் அனைத்து தடைகளையும் தாண்டி இன்றைய எபிசோடில் நடைபெறவுள்ளது.

    விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிப்பிக்குள் முத்து சீரியல் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இது வழக்கமான அக்கா, தங்கை கதை கிடையாது. தான் மகளாக நினைத்து வளர்ந்த தங்கை காதலித்தவனை திருமணம் செய்துகொள்வதற்காக அக்கா ஒரு மனவளர்ச்சி குன்றிய இளைஞனை திருமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையை தியாகம் செய்வது தான் சீரியலின் ஒன்லைன்.
    ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘செல்லேலி காபுரம்’ என்ற தெலுங்கு சீரியலின் ரீமேக்  தான் சிப்பிக்குள் முத்து.  இந்த சீரியல் தெலுங்கு சின்னத்திரையில் டாப் சீரியல்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. தமிழிலும் பெரிய அளவில் ஹிட் ஆகும் என்ற எதிர்பார்ப்ப்பில் ஸ்டார் விஜய்யில் சீரியல் ரீமேக் செய்யப்பட்டு ஒளிப்பரப்பாகி வருகிறது.

    இனி வெண்பா எனக்கு வேண்டாம்.. முற்றுப்புள்ளி வைத்த டாக்டர் பாரதி!

    இந்த சீரியல் மூலமாக  கன்னட சீரியல் நடிகர் ஜெய் டிசோசா தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியுள்ளார். தற்போது சீரியல் முக்கியமான கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதாவது, வாணியின் சித்தியும் பொன்னியும் சேர்ந்து பொய் சொல்லி வாணி - ஆகாஷ் திருமணத்தை நடத்தி வைப்பது வாணிக்கு தெரிந்து விட்டது. அவரின் மூத்த தங்கையும், வாணியின் தோழி நந்தினியும் தான் இந்த விஷயத்தை கண்டுப்பிடிக்கிறார்கள். சித்தியும் பொன்னியும் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்ற அதிர்ச்சியை வாணியால் தாங்கி கொள்ள முடியவில்லை. உடனே இந்த கல்யாணத்தை நிறுத்தலாம் என்கிறார் வாணியின் தங்கை.



    ஆனால் பொன்னியின் மாமனார், மாமியாரின் நல்ல உள்ளத்திற்காக ஆகாஷை ஏற்றுக் கொள்கிறார் வாணி. இருவரின் திருமணமும் பெரியவர்களின் ஆசியுடன் இனிதே நடைபெறுகிறது. இதுக் குறித்த புரமோ தற்போது விஜய் டெலிவிஷன் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி