Home /News /entertainment /

வாணியை காப்பாற்ற வரும் வெண்ணிலா.. சீரியல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

வாணியை காப்பாற்ற வரும் வெண்ணிலா.. சீரியல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

வாணி - வெண்ணிலா

வாணி - வெண்ணிலா

சின்னத்திரையில் தற்போது வாணி, வெண்ணிலா இருவரும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல் நடிகைகளாக உள்ளனர்.

    விஜய் டிவி சிப்பிக்குள் முத்து சீரியலில் ஆபத்தில் இருக்கும் வாணியை காப்பாற்ற என்ட்ரி கொடுக்கிறார் காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா. இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    சிப்பிக்குள் முத்து சீரியல் திரைக்கதை தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிப்பரப்பாகி வருகிறது. வாணியின் சித்தியும் தங்கையும் அவருக்கு ஆகாஷை அவர்களின் சுயநலனுக்காக கல்யாணம் செய்து வைத்தனர். ஆனால் கதையோ வேற வழியில் செல்கிறது. ஆகாஷ் ஏதோ ஒரு விபத்தினால் தான் இந்த நிலைமைக்கு ஆளாகி இருக்கிறார். அதை கண்டறிந்து சரி செய்ய நினைக்கிறார் வாணி. அதனால் ஆகாஷை பொது இடத்திற்கு அழைத்து செல்வது மற்றவர்களுடன் பேச வைப்பது என பல முயற்சிகளை வாணி மேற்கொண்டு வருகிறார்.

    மனைவியுடன் மீண்டும் சேர காத்திருக்கும் பிரபல சின்னத்திரை நடிகர்!

    இந்நிலையில் ஆகாஷும் வாணியும் மார்க்கெட் செல்கின்றனர். அங்கு ரவுடிகள் வாணியை கடத்தி விடுகின்றனர். ஆகாஷ் வாணியை தேடி அலைகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தை போல் அழுகிறார். அப்போது தான் காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா,  சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார். வழக்கமாக  மகா சங்கமம் எபிசோடில் தான் இதுப் போன்று நடக்கும். ஆனால் இங்கு வாணியை காப்பாற்ற   ஸ்பெஷலாக  வருகிறார் வெண்ணிலா.



    இதுக் குறித்த காட்சிகள் புரமோவில் இடம்பெற்றுள்ளன. வாணியை தேடி ஆகாஷ் அலைய, அப்போது வெண்ணிலா அவருக்கு உதவி செய்கிறார். பின்பு இருவரும் வாணி இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்து விடுகின்றனர். உடனே அங்கு செல்கின்றனர். ரவுடிகள் வாணியை கட்டிப்போட்டு டார்ச்சர் செய்கின்றனர். அவர்களை அடிக்கிறார் வெண்ணிலா. வாணியை காப்பாற்றுக்கிறார். கடைசியில் ரவுடிகள் வாணி, வெண்ணிலா இருவரையும் மடக்கி பிடிக்கின்றனர். அப்போது தான் ட்விஸ்ட், ஆகாஷ் ரவுடிகளை அடித்து தும்சம் செய்கிறார்.

    ஹோட்டலில் வேலை செய்யும் கதிர்.. அதிர்ச்சியில் கலங்கி நிற்கும் முல்லை!

    சின்னத்திரையில் தற்போது வாணி, வெண்ணிலா இருவரும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல் நடிகைகளாக உள்ளனர். இருவரும் இப்போது ஒரே சீரியலில் என்ட்ரி கொடுப்பது சீரியல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி