ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இன்னும் 1 வாரத்தில் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இன்னும் 1 வாரத்தில் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சிப்பிக்குள் முத்து

சிப்பிக்குள் முத்து

இந்த தொடரை விரைவில் முடிக்க சேனல் குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சிப்பிக்குள் முத்து சீரியல் அடுத்த வாரத்துடன் முடிவடைவதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

  விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே நாள் ஒன்றுக்கு ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாக்கியலட்சுமி’ , ‘தமிழும் சரஸ்வதியும்’ ‘செல்லம்மா’ உள்ளிட்ட ஏராளமான சீரியல்கள் ரசிகர்களின்  உள்ளம் கவர்ந்த சீரியல்கள் லிஸ்டில் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவி ‘சிப்பிக்குள் முத்து’ என்ற புதிய சீரியலை டெலிகாஸ்ட் செய்ய தொடங்கியது. கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் பிரபல நடிகராக வலம் வரும் ஜெய் டிசோசா விஜய் டிவி சிப்பிக்குள் முத்து சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். இவர் இந்த சீரியலில் ஆகாஷ் என்ற ரோலில் நடிக்கிறார்.

  மீண்டும் சன் டிவியில் சித்தி வெண்பா.. அதுவும் யாருக்கு ஜோடியா நடிக்க போறாங்க தெரியுமா?

  ஜெய் டிசோசா ‘ராக’ மற்றும் ‘ஹேப்பி நியூ இயர்’ போன்ற கன்னட மொழிப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக வாணி ரோலில் லாவண்யா நடிக்கிறார். கதைப்படி சித்தி பரமேஸ்வரியும் அவரின் மகள் நிலாவும்  பிளான் செய்து வாணிக்கு ஆகாஷை திருமணம் செய்து வைத்தனர். 3 அக்கா தங்கைகளும் ஒரே வீட்டில் மருமகள்களாக சென்றனர். ஆகாஷ் பழைய விஷயங்களை மறந்து விட்டு குழந்தை போல் நடந்து வந்தார். அவரை வாணி தாய் போல் பார்த்து எல்லா விஷயத்தை ஞாபகத்திற்கு வர  வைத்தார். கடைசியில் அவர் வாணியை மறந்து விட்டார்.  அவருக்கு பிறந்த குழந்தையும் அவருக்கு நினைவில் இல்லை.

  24 மணி நேரத்தில் உண்மையை நிரூபிக்க போகும் சரஸ்வதி.. தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இயக்குனர் வைத்த ட்விஸ்ட்!

  இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தங்களின் முழு பங்களிப்பை தந்து வருகின்றனர். இருப்பினும் சீரியல் டி.ஆர்.பி அடி வாங்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த தொடரை விரைவில் முடிக்க சேனல் குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)  அதன் அடிப்படையில் ஆகாஷ் மீண்டும் வாணியுடன் சேருவது போல் கதை மாற்றப்பட்டு அடுத்த வாரத்துடன் சீரியல் முடிவடையும் என தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த நேரத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள ’கண்ணே கலைமானே’ சீரியல் ஒளிப்பரப்பாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv