சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகை மாற்றப்பட்டுள்ள தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டிய பிரபல சின்னத்திரை நடிகை திடீரென்று சிப்பிக்குள் முத்து சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’செல்லேலி காபுரம்’ என்ற தெலுங்கு சீரியலின் ரீமேக் தொடரான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. தங்கை காதலித்தவனைத் திருமணம் செய்து கொள்ள, தன்னுடைய வாழ்க்கையை தானே பாழாக்கிக்கொள்ளும் அக்காவின் கதை.தங்கைக்கு அவள் காதலனை திருமணம் செய்து வைக்க வேண்டுமானால், அக்கா மன நலம் குன்றிய ஒருவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் கண்டிஷன். அதற்கு ஏற்றுக் கொண்ட அக்கா, மன நலம் குன்றியவரை திருமணம் செய்து கொள்கிறார். சீரியல் அறிமுக புரமோவிலே இந்த ஒன்லைன் தெரிந்து விட்டது. தற்போது சீரியலில் வாணிக்கு கல்யாணம் முடிந்து விட்டது.
இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.. விஜய்டிவி மாகாபாவின் சொத்து இத்தனை கோடியா?
பொன்னியும் சித்தி பரமேஸ்வரியும் பொய் சொல்லி தான் இந்த கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். அந்த உண்மையை வாணியின் தோழி நந்தினி கல்யாணத்திற்கு முன்பே கண்டுப்பிடித்து சொல்லிவிட்டார். ஆனாலும் கடைசி நேரத்தில் வாணி இந்த கல்யாணத்திற்கு சம்மதம் கூறி ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். இனிமேல் தான் கதை சூடுப்பிடிக்க போகிறது. தங்கைக்கு அக்கா வாணி நல்லது தான் நினைத்தார், ஆனால் அவர் வாணியின் வாழ்க்கையை கெடுக்க ,வந்த முதல் நாளே பிளான் போட தொடங்கி விட்டார்.
ரஜினி பட நடிகைக்கு இப்படியொரு நிலைமையா! சோப்பு விற்பதாக அவரே சொன்ன தகவல்
இப்படி சீரியல் திரைக்கதை ஒருபக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க இந்த சீரியலில் வாணியின் சித்தி ரோலில் வில்லியாக நடித்த நிலானி சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடிகை ரிஹானா இனி பரமேஸ்வரி ரோலில் நடிக்கவுள்ளார். நேற்று முதல் சீரியலில் ரிஹானாவின் அறிமுகம் தொடங்கி விட்டது.
View this post on Instagram
நடிகை நிலானி இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்துள்ளார். கலர்ஸ் தமிழில் சேனலில் இருந்து விஜய் டிவி பக்கம் வந்தவர் சின்ன கேப்புக்கு பின்பு ‘சிப்பிக்குள் முத்து’ சிரியலில் நடிக்க தொடங்கினார். வில்லத்தனத்தில் மிரட்டு அவரின் ரோல் ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்து இருந்தது. இந்நிலையில் திடீரென்று நிலானி சீரியலில் இருந்து விலகி இருப்பது சீரியல் ரசிகர்களை கடுப்பாகியுள்ளது. டெலிகாஸ்ட் ஆன கொஞ்ச நாளிலே சீரியல் நடிகர், நடிகைகள் மாறினால் அது விறுவிறுப்பை குறைக்கும் என்பதே ரசிகர்களின் கோபத்துக்கு காரணம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.