Home /News /entertainment /

ஓ மை காட்..புலம்பி தள்ளும் ’சிப்பிக்குள் முத்து’ ரசிகர்கள்! ஏன் என்னாச்சு?

ஓ மை காட்..புலம்பி தள்ளும் ’சிப்பிக்குள் முத்து’ ரசிகர்கள்! ஏன் என்னாச்சு?

சிப்பிக்குள் முத்து

சிப்பிக்குள் முத்து

சிப்பிக்குள் முத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சிப்பிக்குள் முத்து சீரியலின் ஷூட்டிங் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

    கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் பிரபல நடிகராக வலம் வரும் ஜெய் டிசோசா விஜய் டிவி  சிப்பிக்குள் முத்து சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சீரியலில் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் ஜெய் டிசோசா, ஆகாஷ் என்ற ரோலில் பழைய விஷயங்களை மறந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனால் சீரியலில் இவர் செய்யும் ரொமான்ஸ் தான் பல ட்ரோல்களை சந்தித்து வருகிறது.

    சீரியல் நடிகை கூட நடிக்க முடியாது.. தன்னை ரிஜெக்ட் செய்த ஹீரோக்களுக்கு வாணி போஜன் கொடுத்த பதிலடி!

    கதைப்படி சித்தி பரமேஸ்வரியும் அவரின் மகளுன் பிளான் செய்து வாணிக்கு ஆகாஷை திருமணம் செய்து வைத்தனர். 3 அக்கா தங்கைகளும் ஒரே வீட்டில் மருமகள்களாக சென்றுள்ளனர். இதில் வாணி, ஆகாஷை தாய் போல் பார்த்துக் கொள்கிறார். இதனால் அவர் மீது வீட்டில் உள்ள அனைவருக்கும் சற்று அதிக மரியாதை. ஆகாஷுக்கு அப்ப அப்ப  பழைய விஷயங்கள் ஞாபகத்திற்கு வரும். திடீரென்று அது மறைந்து விடும். ஆனால் வாணியுடன் ரொமான்ஸ் செய்ய மட்டும் மறக்கமாட்டார்.

    cook with comali: ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த குக் வித் கோமாளி சந்தோஷ் - சுனிதா!

    இந்த சீரியலில் வாணி - ஆக்‌ஷா ரொமான்ஸ் நிறைய ட்ரோல்களை சந்தித்து வருகிறது. பைத்தியம் போல் இருப்பவர் எப்படி இப்படியெல்லாம் உருகி உருகி காதலிக்கிறார் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் இப்போது வாணி கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    சிப்பிக்குள் முத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஓ மை காட்! என ஷாக் ஆகியுள்ளனர். இது உண்மையில்  சீரியலில் வரப்போகும் ட்விஸ்டா? இல்லை கனவா? என்பது சீரியல் டெலிகாஸ் ஆன பின்பு தான் தெரிய வரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி