• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிரபலம்...

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிரபலம்...

பிக் பாஸ்

பிக் பாஸ்

மற்றவர்களை விட குறைந்த வாக்குகள் பெற்ற காரணத்தினால் அவர் பிக் பாஸ் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

  • Share this:
    இந்த வார எலிமினேஷனில் பின்னணி பாடகி சின்னப்பொண்ணு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து, நாடியா சங், அபிஷேக் ராஜா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து இன்றைய எலிமினேஷனில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் பின்னணி பாடகி சின்னப்பொண்ணு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மற்றவர்களை விட குறைந்த வாக்குகள் பெற்ற காரணத்தினால் அவர் பிக் பாஸ் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: