Benny Dayal: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து விலகும் பென்னி தயாள்?

பென்னி தயாள்

சூப்பர் சிங்கர் 8-உடன் தொடர்புடைய எதையும் பதிவிட மாட்டேன். எல்லா வெறுப்பு செய்திகளையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் தான் இருக்க மாட்டேன் என பாடகர் பென்னி தயாள் அறிவித்துள்ளார்.

    இளம் பாடகர்களின் திறமைகளை வெளியுலகிற்கு சொல்லும் விதமாக, விஜய் தொலைக்காட்சியில் 'சூப்பர் சிங்கர்' எனும் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கரின் எட்டாவது சீசனின் நடுவர்களில் பின்னணி பாடகர் பென்னி தயாளும் ஒருவர். அவருடன் இணைந்து அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.பி சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் கடந்த சில சீசன்களாக நடுவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பென்னியின் சமீபத்திய பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெறுக்கத்தக்க செய்திகளை இனியும் தாங்கிக் கொள்ள முடியாது, எனக் குறிப்பிட்டிருக்கும் அவர் அடுத்த சீசனில் இருந்து சூப்பர் சிங்கரில் இடம்பெற மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    "நான் இனி சூப்பர் சிங்கர் 8-உடன் தொடர்புடைய எதையும் பதிவிட மாட்டேன். எல்லா வெறுப்பு செய்திகளையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. நீங்கள் காட்டிய அனைத்து அன்புக்கும் நன்றி. நான் மனிதனாக இருக்கிறேன். எல்லாத்தையும் முடித்து விட்டேன். நன்றி. அடுத்த சீசனில் உங்களை பார்க்க மாட்டேன்" என்று பதிவிட்டிருக்கும் பென்னி, இதற்கான காரணத்தை நேரடியாகக் கூறவில்லை. இருப்பினும் சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் சமீபத்தில் எலிமினேட் ஆனார். இதன் விளைவாக இருக்குமோ என ரசிகர்கள் சந்தேகிக்கிறார்கள்.



     




    View this post on Instagram





     

    A post shared by BENNY DAYAL (@bennydayalofficial)






    ஸ்ரீதர் சேனா சூப்பர் சிங்கர் 8-ல் திறமையான போட்டியாளராக இருந்தார். போட்டியின் பல சுற்றுகளில் சிறந்த பெர்ஃபாமராக வலம் வந்த ஸ்ரீதர், கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரை விட பலவீனமான போட்டியாளர்கள் சூப்பர் சிங்கர் போட்டியில் இருக்கும் போது, ஜட்ஜ்கள் ஸ்ரீதரை நீக்கிவிட்டார்கள் என்று பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இந்த முடிவு ஒருபக்கம் சார்பானது என்று நினைத்த ரசிகர்கள் பென்னி தயாள் மீது தனது கோபத்தை காட்டினர். ஏனென்றால் அவர் தான் ஸ்ரீதர் சேனாவின் எலிமினேஷனை அறிவித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: