Simbu: சர்வதேச நிகழ்ச்சியின் மூலம் டிவி தொகுப்பாளராகிறாரா சிம்பு?

சிம்பு

இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் தயாரிக்க ஸீ நெட்வொர்க் அனுமதி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

  • Share this:
    நடிகர் சிம்பு புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உடலைக் குறைத்து மீண்டும் ஃபார்முக்கு வந்த நடிகர் சிம்பு தற்போது படங்களில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையே பிக்பாஸின் அடுத்த சீசனை அவர் தொகுத்து வழங்க உள்ளதாக சமீபத்தில் இணையத்தில் வதந்திகள் வலம் வந்தன. இந்நிலையில் பிரபலமான சர்வதேச நிகழ்ச்சியான 'சர்வைவர்' தமிழ் பதிப்பை அவர் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வெளிநாடுகளில் சர்வைவர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரபலம். ஆளில்லாத தனித்தீவில் போட்டியாளர்களை தங்க வைத்து, அவர்களுக்கு விதவிதமான டாஸ்குகள் அளிப்பார்கள். 100 நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக தாக்குப் பிடிக்கும் போட்டியாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். பெரும் பரிசுத் தொகை அவருக்கு வழங்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் தயாரிக்க ஸீ நெட்வொர்க் அனுமதி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அவர்கள் இதற்கான பணிகளில் இறங்க உள்ளனர். தென்னாப்பிரிக்கா அருகே இதற்கென ஒரு தனித்தீவை அவர்கள் வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மும்பையின் பிரபல தயாரிப்பு நிறுவனத்தினருடன் இணைந்து ஸீ இந்நிகழ்ச்சியை தயாரிக்கிறது.

    பிக் பாஸ் எப்படி இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட முக்கிய மொழிகளிலும் ஒளிபரப்பாகிறதோ, அதேபோல் இந்த நிகழ்ச்சியையும் முக்கியமான அனைத்து மொழிகளிலும் உருவாக்குகின்றனர். இதை தொகுத்து வழங்கும் நடிகர்கள் பட்டியலில் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயனின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அதில் சிம்புவுக்கு வாய்ப்பு அதிகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: