ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சிக்காக சிம்புவின் புதிய தோற்றம் - வைரலாகும் ஃபோட்டோ!

பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சிக்காக சிம்புவின் புதிய தோற்றம் - வைரலாகும் ஃபோட்டோ!

சிம்பு

சிம்பு

நடிகர் சிம்பு புதிய தொகுப்பாளராக பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் களமிறங்க போவது உறுதி என்கிற ரீதியில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  தமிழ் டிவி சேனல்கள் வழங்கும் ரியாலிட்டி ஷோக்களில் மெகா ஹிட் ரியாலிட்டி ஷோவாக இருக்கிறது பிக்பாஸ். ரசிகர்களின் பேராதரவு பெற்ற பிரபல டிவி சேனலான ஸ்டார் விஜய் டிவி-யில் பிக்பாஸின் 5 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இருக்கிறது. நடந்து முடிந்துள்ள 5 சீசன்களையும் உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ஷோவை சுவாரசியமாக்கினார். ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 முடிந்த சில நாட்களிலேயே பிக்பாஸின் OTT வெர்ஷன் 24 மணி நேரமும் நேரலை என்ற அடிப்படையில் டெலிகாஸ்ட் ஆக துவங்கியது.

  பிக்பாஸ் அல்ட்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் இந்த புதிய பிக்பாஸ் வெர்ஷன் ஸ்டார் விஜய் டிவி-யில் டெலிகாஸ்ட் செய்யப்படாமல், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. பிக்பாஸ் அல்ட்டிமேட் ஷோவில் சின்னத்திரை பிக்பாஸ் ஷோவின் 5 சீசன்களில் இருந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்க வைக்கப்பட்டு உள்ளனர். வனிதா விஜயகுமார், நிரூப், ஜூலி, அபிராமி வெங்கடாசலம், தாமரை செல்வி, நடிகர் தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், நடிகை சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக், அபிநய், சுருதி, கவிஞர் சினேகன் உள்ளிட்ட 14 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் அல்ட்டிமேட் துவங்கியது.

  தனுஷ் எனக்கு மருமகன் இல்லை - அதிர்ச்சியைக் கிளப்பிய ரஜினிகாந்த்

  பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளராக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்த வாரம் டாஸ்க் குயினான சுஜா வருணி வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து டபுள் எவிக்ஷனில் ஷாரிக் மற்றும் அபிநய் ஆகிய இருவரும் எலிமினேட் ஆனார்கள். வெற்றிகரமாக 4-வது வாரத்தை பிக்பாஸ் அல்டிமேட் எட்டி உள்ள நிலையில், ஷோவை தொகுத்து வழங்கும் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார் நடிகர் கமல். ஏற்கனவே ஒப்பு கொண்ட திரைப்பட வேலைகள் நிறைய இருப்பதால் தவிர்க்க முடியாமல் பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கிடையே என்ன காரணத்தினாலோ போட்டியில் இருந்து பாதியில் வெளியேறி இருக்கிறார் வனிதா விஜயகுமார்.

  நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை அறிவிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

  உலகநாயகன் கமல்ஹாசன் விலகிய நிலையில் அடுத்ததாக எந்த பிரபலம் பிக்பாஸ் அல்டிமேட்டை தொகுத்து சுவாரசியமாக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், நடிகர் சிம்பு புதிய தொகுப்பாளராக பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் களமிறங்க போவது உறுதி என்கிற ரீதியில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்கான ஃபோட்டோ ஷூட்டும் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே சோஷியல் மீடியாவில் நடிகர் சிம்புவின் புதிய லுக் ஃபோட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

  நம்பர் 1 நடிகையாகும் ஆசை இல்லை - சமந்தா ஓபன் டாக்!

  தற்போது வைரலாகி வரும் குறிப்பிட்ட ஃபோட்டோவில் இருக்கும் லுக் தான், சிம்புவின் பிக்பாஸ் அல்ட்டிமேட் ஷோவிற்கான லுக்கா அல்லது வேறோன்றுக்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோவா என்பது தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சிம்புவின் பிக்பாஸ் லுக் ஃபோட்டோ என்று கூறி ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil, Vijay tv