பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இனி நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவி-யின் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மாதம் இதன் 5-ம் சீசன் நிறைவு பெற்றது. ராஜு ஜெயமோகன் டைட்டிலை வென்றார். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் அல்ட்டிமேட் ஷோவில் சின்னத்திரை பிக்பாஸ் ஷோவின் 5 சீசன்களில் இருந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றுள்ளனர்.
வனிதா விஜயகுமார், நிரூப், ஜூலி, அபிராமி வெங்கடாசலம், தாமரை செல்வி, நடிகர் தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், நடிகை சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக், அபிநய், சுருதி, கவிஞர் சினேகன் உள்ளிட்ட 14 போட்டியாளர்கள் இதில் கலந்துக் கொண்டனர்.
Valimai Review: அஜித்தின் வலிமை திரைப்படம் எப்படி இருக்கிறது?

சிம்பு
இதனையும் பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் ஹாசனே தொகுத்து வழங்கினார். இதற்கிடையே ஏற்கனவே ஒப்பு கொண்ட திரைப்பட வேலைகள் நிறைய இருப்பதால் வேறு வழியின்றி, பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் நடிகர் கமல் ஹாசன். இதைத் தொடர்ந்து அடுத்து யார் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்தது.
வலிமை முதல் காட்சி தாமதம் - நாட்டு வெடி வெடிக்க முயற்சி செய்த ரசிகர்கள்
அதில் சிம்புவின் பெயர் பலமாக அடிப்பட்டது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதாவது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவதற்கான ப்ரோமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ப்ரோமோவில், ’இதை எதிர் பாக்கலல, நானே எதிர் பாக்கல’ என்கிறார் சிம்பு. அதில் அவரின் தோற்றம் அனைவரையும் கவரும்படி உள்ளது. ஆக இனி வாரா வாரம் சிம்பு ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் விருந்து தான்!
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.