• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சீரியல் பிரபலங்கள் ரேஷ்மா-மதனுக்கு இன்ப அதிர்ச்சி தந்த சிம்பு! வைரலாகும் வீடியோ!

சீரியல் பிரபலங்கள் ரேஷ்மா-மதனுக்கு இன்ப அதிர்ச்சி தந்த சிம்பு! வைரலாகும் வீடியோ!

ரேஷ்மா - மதன்

ரேஷ்மா - மதன்

யாரும் எதிர்பாராத விதமாக சீரியல் பிரபலம் ரேஷ்மா மதன் தம்பதிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் சிம்பு.

  • Share this:
    கடந்த சில வாரங்களாக பல சின்னத்திரை பிரபலங்களுக்கு திருமணமாகி வருகிறது. அந்த வகையில் சின்னத்திரையில் மிக முக்கிய நாடகங்களில் நடித்து வந்த ரேஷ்மா மற்றும் மதன் அவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இவருவரும் முதன்முதலில் ஜீ தமிழில் 'பூவே பூச்சூடவா' என்கிற நாடகத்தில் தான் இணைந்து நடித்தனர். அப்போதில் இருந்தே இருவருக்குள்ளும் நல்ல நட்பு மலர்ந்துள்ளது.

    அதன் பிறகு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'அபி டெய்லர்' என்கிற நாடகத்தில் மீண்டும் இணைந்தனர். இதில் இவர்கள் இருவரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சில ஆண்டுகளாக நண்பர்காளாக இருந்த இவர்கள், பிறகு காதலர்களாக மாறியுள்ளனர். தங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திருமண பந்தத்தில் இணைவதாக சமூக ஊடங்கங்களில் பதிவிட்டிருந்தனர்.

    அதில், "வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி எங்கள் இருவரின் குடும்பத்தின் ஆசியோடு நாங்கள் திருமணம் செய்துக்கொள்ள போகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. எங்களின் இந்த இனிய பயணத்திற்கு உங்களின் ஆசிகள் எப்போதும் வேண்டும். அன்புடன் மதன் மற்றும் ரேஷ்மா" என்று குறிப்பிட்டிருந்தனர்.

    இதை தொடர்ந்து சென்ற வாரம் திங்கட்கிழமை இருவருக்கும் சிறப்பான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. அதில் ஏராளமான சின்னத்துரை கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களின் வாயிலாக திருமண வாழ்த்துக்களை பதிவுகள் மூலமாகவும், கமெண்ட்கள் மூலமாகவும் வெளிப்படுத்தி இருந்தனர்.

    இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக சர்பிரைஸ் வாழ்த்து ஒன்றை திரையுலகின் பிரபல நடிகரிடம் இருந்து இவர்கள் பெற்றுள்ளனர். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரேஷ்மா பதிவிட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் வீடியோ கால் மூலம் திருமண வாழ்த்துக்களை நடிகர் சிம்பு தெரிவித்திருந்தார். இந்த சிறப்பான தருணத்தை வீடியோ பதிவு செய்திருந்த ரேஷ்மா, அந்த வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "எங்கள் இருவருக்கும் இது மிக சர்பிரைஸாக இருந்தது. நடிகர் சிம்பு வீடியோ கால் செய்ததும் அதிக உற்சாகத்தில் மதன் கத்திவிட்டார். இது மிக சிறந்த நாள்" என்று ரேஷ்மா குறிப்பிட்டிருந்தார். மேலும் இருவரும் சிம்புவிற்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர். இந்த இன்ஸ்டாகிராம் பதிவு நெட்டிசன்களிடன் வரவேற்பை பெற்று வருகிறது.




    குறிப்பாக நடிகர் சிம்புவின் ரசிகர்களிடம் இருந்து ஏராளமான கமெண்ட்களை இது பெற்று வருகிறது. பலர் இந்த இளம் ஜோடிக்கு திருமண வாழ்த்துகள் தெரிவிப்பதுடன் சிம்புவை பாராட்டி தள்ளுகின்றனர். இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவை சுமார் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இன்னும் பல லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: