• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சில்லுனு ஒரு காதல் சீரியலில் சிறப்பு வேடத்தில் வரும் பிரபல மிமிக்ரி மன்னர்: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் எபிசோட்!

சில்லுனு ஒரு காதல் சீரியலில் சிறப்பு வேடத்தில் வரும் பிரபல மிமிக்ரி மன்னர்: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் எபிசோட்!

சில்லுனு ஒரு காதல்

சில்லுனு ஒரு காதல்

சேது பலகுரலில் பேசும் திறமை கொண்டவர். மேலும், இவர் விஜய் டிவி-யில் பல காமெடி ஷோக்களுக்கு நடுவராக இருந்துள்ளார்.

  • Share this:
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபல சீரியலான சில்லுனு ஒரு காதல் (SOK) தொடரில் நடிகரும் மிமிக்ரி கலைஞருமான சேது சுப்ரமணி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். அதில், கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை நடத்தும் சிறப்பு விருந்தினராக சேது காணப்படுவார் என கூறப்படுகிறது. அவர் நடித்த அந்த எபோசோட்கள் வரும் செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ஒளிபரப்பப்படும். இது தொடர்பான ஒரு ப்ரோமோவை கலர்ஸ் தமிழ் தனது அதிகாரப்பூரவ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில் "சில்லுனு ஒரு காதல் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! வரும் வெள்ளி இரவு நம்ம கலர்ஸ் தமிழில்!" என்று குறிப்பிட்டுள்ளது. சில்லுனு ஒரு காதல் சமீபத்திய அத்தியாயங்களில், சூரிய குமார் (சமீர் அகமத்து) மற்றும் கயல்விழி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் கிராமத்திற்கு வந்துள்ளனர். அங்கு கயல்விழியை வீட்டை விட்டு விரட்ட கமலா (இந்துமதி) ஏற்பாடு செய்கிறார். மறுபுறம், தனம் (ரேகா ஏஞ்சலினா) விநாயகர் சதுர்த்தி விழா முடிவதற்குள் சூர்யாவை எப்படியாவது மாற்ற வேண்டும் என கயல்விழியிடம் அறிவுறுத்துகிறார்.

மேலும் அதற்கான சரியான யோசனைகளைத் கயல்விழிக்கு கொடுக்கிறார். இந்த நிலையில் தற்போது, வரவுள்ள எபிசோடில் சேது சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்படும் அந்த எபிசோடில் களிமண் கொண்டு விநாயகர் சிலைகளை செய்வது உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தும் விருந்தினராக பங்கேற்றுள்ளார்.



சேது பலகுரலில் பேசும் திறமை கொண்டவர். மேலும், இவர் விஜய் டிவி-யில் பல காமெடி ஷோக்களுக்கு நடுவராக இருந்துள்ளார். அதிலும் புகழ்பெற்ற கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் இவர் மேலும் பிரபலமானார். இவர் கட்டப்பாவ காணோம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் சீரியலில் சிறப்பு வேடத்தில் வருவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சில்லுனு ஒரு காதல் ஸ்பெஷல் எபோசோட்டில் கயல்விழி மற்றும் சூரிய குமார் சம்பந்தப்பட்ட ஜோடி அடிப்படையிலான விளையாட்டுக்கள் நிறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read... விஜய் டிவி சீரியல் பிரபலமான கம்பம் மீனா வீட்டில் நடந்த விசேஷம்... ரசிகர்கள் வாழ்த்து!

இது தவிர, கயல்விழி, நாகாவின் அடியாட்களிடம் இருந்து சூரியனை காப்பாற்றுகிறார். இதனால், கயல் மீது உள்ள ஈர்ப்பு சூர்யாவுக்கு அதிகமாகிறது. இதனால் இந்த ஜோடி நெருக்கமாகிறது. மேலும், கயல்விழியை வீட்டிலிருந்து வெளியேற்றுவதில் கமலா வெற்றி பெறுகிறாரா? என்பது வரவிருக்கும் எபிசோட்களில் முக்கிய திருப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில்லுனு ஒரு காதல் சீரியலில் கயல்விழியாக தர்ஷினி கவுடா, சூரிய குமார் ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் சமீர் அகமது, ராஜேஸ்வரியாக சியமந்த கிரண், தனமாக ரேகா ஏஞ்சலினா, ஹன்னா குளோரி மற்றும் பலர் நடித்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: