Home /News /entertainment /

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. சில்லுன்னு ஒரு காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 2 பிரபலங்கள்!

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. சில்லுன்னு ஒரு காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 2 பிரபலங்கள்!

சில்லுன்னு ஒரு காதல்

சில்லுன்னு ஒரு காதல்

அம்மன் சீரியலில் ஈஸ்வர் ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அமல்ஜித் சில்லுன்னு ஒரு காதல் தொடரில் செய்தியாளர் ரோலில் நடித்துள்ளதாக தகவல்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் சில்லுன்னு ஒரு காதல் தொடரில் ரசிகர்களின் ஃபேவரெட் சின்னத்திரை பிரபலங்களான அமல்ஜித் மற்றும் பிரஜின் என்ட்ரி கொடுக்கிறார்கள்.

    சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் கலர்ஸ் தமிழ் சேனலில் பல்வேறு வகையான சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இந்த சேனலில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பச்சக்கிளி, நம்ம மதுரை சிஸ்டர்ஸ், கண்ட நாள் முதல், வள்ளி திருமணம், இது சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல ஹிட் சீரியல்கள் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனிடையே திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "சில்லுன்னு ஒரு காதல்" மெகா சீரியல். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த தொடராக உள்ளது.

    4 வருட உழைப்பு.. அளவில்லா சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு!

    இந்த சீரியலில் ஹீரோவாக நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி கேரக்டரில் நடிகர் சமீர் அகமது, ஹீரோயினாக நடிகை தர்ஷினி கவுடா நடித்து வருகின்றனர். சூர்யா - கயலின் கெமிஸ்ட்ரி இந்த சீரியலின் மிகப் பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம். மராத்தி டிவி தொடரான ​​’ராஜா ராணிச்சி கா’ தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்த சீரியலில் சுட்டி பெண்ணாக இருந்த கயல் போலீஸ் அகாடாமியில் சேர்ந்து அனைத்து தேர்விலும் வெற்றி பெற்று போலீஸ் ஆகிவிட்டார். பின்பு மறுபடியும் சூர்யாவும் கயலும் திருமணம் செய்துக் கொண்டனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    கல்யாணத்துக்கு முன்னாடி அமீர் - பாவ்னி வாழ்க்கையில் இப்படியொரு நல்ல விஷயமா!

    டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலக்கும் சில்லுன்னு ஒரு காதல் தொடரில் இதற்கு முன்பு ராஜேஷ், ராகவி, சிங்கமுத்து, சஞ்சனா சிங், அபிராமி வெங்கடாசலம், சோனா, மிமிக்ரி கலைஞர் சேது சுப்ரமணி உள்ளிட்ட பலர் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். இவர்கள் வரிசையில் இப்போது சிறப்பு தோற்றத்தில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்கள் அம்மன் சீரியல் நடிகர் அமல்ஜித் மற்றும் காதலிக்க நேரமில்லை பிரஜின்.



     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvtamil)


     


     

    வரும் நாட்களில் இவர்களின் என்ட்ரி சீரியலில் வர இருப்பதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அம்மன் சீரியலில் ஈஸ்வர் ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அமல்ஜித் சில்லுன்னு ஒரு காதல் தொடரில் செய்தியாளர் ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் பிரஜின் டெல்லி போலீஸ் என  மிடுக்கான தோற்றத்தில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். சீரியலில்  இவர்களின் என்ட்ரி மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. அடுத்து வரப்போகும் ட்விஸ்டுக்காக  ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங்.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

    அடுத்த செய்தி