200 எபிசோட்களை கடந்த பிரபல சீரியல்? கேக் வெட்டி கொண்டாடிய கலர்ஸ் தமிழ் சீரியல் குழு!

சில்லுனு ஒரு காதல்

சீரியல் நடிகர்களின் இந்த எமோஷனலான பதிவுக்கு ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பப்படும் பிரபல சீரியலான சில்லுனு ஒரு காதல், சமீபத்தில் 200 எபிசோட்களை கடந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் வெற்றிகரமாக 200 அத்தியாயங்களைக் கடந்துள்ளதால் சீரியல் குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த சீரியலில் சமீர் அகமது, தர்ஷினி கவுடா, ரேகா ஏஞ்சலினா மற்றும் பலர், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஒரு புதிய மைல்கல்லை எட்டிய சந்தோஷத்தில் சில்லுனு ஒரு காதல் சீரியல் குழுவின் நடிகர்கள் மற்றும் பிற உறுப்பினர்கள் கேக்குகளை வெட்டி கொண்டாடினர். மேலும் இத்தனை நாட்களாக ரசிகர்கள் தந்த பேராதரவுக்கு தங்களது நன்றிகளை நடிகர்கள் அவர்களது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, தனது சக கலைஞர்களுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த நடிகர் சமீர் அஹமது, “ஆம்! sillunuorukadhal 200-வது அத்தியாயத்தை வெற்றிகரமாக தாண்டியது! முழு SOK குழுவுக்கும் ரசிகர்களுக்கும் எனது அன்பு எப்போதும் இருக்கும். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்கள் அன்பு எங்களை ஊக்குவிக்கும், ரசிகர்களாகிய நீங்கள் தான் உண்மையான முதுகு எலும்பு. லவ் யூ ஆல்! #sok#sillunuorukadhal#colors.. எனது கோஸ்டார்ஸ் @actornathanshyam @சியமந்தகிரண் @ranjana_nachiyaar @hannah.glory @rekhaangelina @darshinigowda01 ஆகியோருக்கு மிக்க நன்றி" என கேப்ஷன் செய்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். 
View this post on Instagram

 

A post shared by Starboy 🌟 (@sameer_starboy)


இதையடுத்து, சீரியல் வீடியோவைப் பகிர்ந்த தர்ஷினி கவுடா, “இது எங்களது 200 வது எபிசோட். எங்களை ஆதரித்ததோடு இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி !! எங்கள் மீது அன்பை பொழிந்து கொண்டே இருங்கள். ஒவ்வொரு நொடியும் என்னை ஆதரித்த அனைத்து இணை கலைஞர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு (ரசிகர்கள்) ஸ்பெஷல் தேங்க்ஸ் @sameer_starboy @suresh_shanmugam25 @hannah.glory @syamanthakiran @indumathy_manikandan @rekhaangelina @ranjana_nachiyaar @actornathanshyam @moseswilky @sathyaprathyusha_official @kammapandi (sic)" என்று கூறி தனது சக கலைஞர்களை டேக் செய்திருந்தார். 
View this post on Instagram

 

A post shared by DARSHINI GOWDA (@darshinigowda01)


மேலும், சீரியல் குழு கேக் வெட்டிக் கொண்டாடும் வீடியோ காட்சிகளை பகிர்ந்து கொண்ட ரேகா ஏஞ்சலினா, “சில்லுனு ஒரு காதல் சீரியலின் 200 வது அத்தியாயத்தின் படப்பிடிப்பு கொண்டாட்டங்கள். உங்கள் ஆதரவு மற்றும் அன்புக்கு மிக்க நன்றி. இன்னும் வெகுதூரம் போகவேண்டும்.... உங்களை மகிழ்விக்க எங்கள் பயணம்மேலும் தொடரும்... #SOK #SILLUNUORUKADHAL (sic) ” என்று கேப்ஷன் செய்திருந்தார். 
View this post on Instagram

 

A post shared by Rekha Angelina (@rekhaangelina)


சீரியல் நடிகர்களின் இந்த எமோஷனலான பதிவுக்கு ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சில்லுனு ஒரு காதல் என்ற காதல் நாடகம் பார்வையாளர்களிடையே தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Also read... பாரதி கண்ணம்மாவில் நியூ என்ட்ரி - அகிலன் யார் தெரியுமா?

சில்லுனு ஒரு காதல் படத்தில் கயல்விழி கதாபாத்திரத்தில் தர்ஷினி கவுடா, சூரிய குமார் ஐபிஎஸ்-ஆக சமீர் அகமது, ராஜேஸ்வரியாக சியமந்த கிரண், காயத்ரியாக சாய்ரா பானு, வினோத் கதாபாத்திரத்தில் விஜே அயூப், அகிலாவாக ஈகவல்லி, கல்யாணியாக ஸ்ரீலதா, தனமாக ரேகா ஏஞ்சலினா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published: