Home /News /entertainment /

மிகப் பெரிய வெற்றி கொண்டாட்டத்தில் ‘சில்லுன்னு ஒரு காதல்’ சீரியல் குழு!

மிகப் பெரிய வெற்றி கொண்டாட்டத்தில் ‘சில்லுன்னு ஒரு காதல்’ சீரியல் குழு!

சில்லுன்னு ஒரு காதல்

சில்லுன்னு ஒரு காதல்

சில்லுன்னு ஒரு காதல் 500 எபிசோடுகளை தாண்டி சாதனைப் படைத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் சில்லுன்னு ஒரு காதல் தொடர் வெற்றிக்கரமாக 500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால் சீரியல் குழுவினர் செம்ம ஹாப்பி.

    கலர்ஸ் தமிழில் சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.குறிப்பாக கலர்ஸ் தமிழ் சீரியல்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன்  ஒளிப்பரப்பாகி வருகின்றன. அம்மன், மாங்கல்ய சந்தோஷம், இதயத்தை திருடாதே 2, அபி டெய்லர் உள்ளிட்ட பல ஹிட் சீரியல்கள் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் "சில்லுனு ஒரு காதல்" மெகா தொடர் இளைஞர்களின் ஃபேவரெட் சீரியல் வரிசையில் இடம்பெற்றுள்ளது. . ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த சீரியலில் ஹீரோவாக நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி கேரக்டரில் நடிகர் சமீர் அகமது, ஹீரோயினாக சுட்டி பெண் வேடத்தில் நடிகை தர்ஷினி கவுடா நடித்து வருகின்றனர்.

    மிகப் பெரிய சந்தோஷத்தில் ’வானத்தை போல’ சின்ராசு – துளசி!

    சூரிய குமார் என்ற கேரக்டரில் நடிகர் சமீர் அகமது, கயல்விழி கேரக்டரில் தர்ஷினி கவுடா ஆகியோர் மிகப் பெரிய ரசிகர்கள் சம்பாதித்துள்ளனர். இவர்களை தவிர ஸ்ரீலதா, ரேகா ஏஞ்சலினா, வித்யா சந்திரன், ஷியமந்தா கிரண், நாதன் ஷியாம் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர். சில்லுனு ஒரு காதல் சீரியலில் ராஜேஷ், ராகவி, சிங்கமுத்து, சஞ்சனா சிங், அபிராமி வெங்கடாசலம், சோனா, மிமிக்ரி கலைஞர் சேது சுப்ரமணி உள்ளிட்ட பலர் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvtamil)






    சில்லுனு ஒரு காதல் கதையின்படி, தற்போது கயல்விழி என்ற கயல் எஸ்.ஐ  ஆகி வி்ட்டார். சூர்யாவுக்கும் கயலுக்கும் மறுபடியும் கல்யாணமும் முடிந்து விட்டது. பர்சனல் லைஃபை தாண்டி இருவரும் தங்களது கெரியரிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சில்லுன்னு ஒரு காதல் 500 எபிசோடுகளை தாண்டி சாதனைப்படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு கண்டிப்பாக ரசிகர்கள் கொடுத்த பேராதரவும் மிகப் பெரிய காரணம். அதற்காக சீரியல் குழு ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளனர்.

    தொடர்ந்து சில்லுன்னு ஒரு காதல் தொடருக்கு ஆதரவு தரும்படியும் கேட்டுக் கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

    அடுத்த செய்தி