விஜய் டிவியில் விரைவில் தொடங்கவுள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் சீசன் 4ல் சித்து - ஸ்ரேயா போட்டியாளர்களாக கலந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஏகப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. சீரியல்களை காட்டிலும் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ஃபேமஸ். சில நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து சீசன் 1, 2 ,3 என தொடரும். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர் நடிகைகள் தங்களது குடும்பத்தினர் உடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். முதல் இரண்டு சீசன்களுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து கடந்த ஆண்டு மூன்றாவது சீசன் தொடங்கப்பட்டது.
நீண்ட வருடம் கழித்து சன் டிவி சீரியலில் நடிக்க வரும் ரஜினி பட நடிகர்!
அந்த சீசனும் டி.ஆர்.பியில் கலக்கியது. நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி நடுவர்களாக இருந்தனர். நடந்து முடிந்த 3வது சீசனில் சரத் - கிருத்திகா டைட்டில் வின்னர் பட்டத்தை சூடினர். இந்நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு அடுத்த சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சி இனிதே ஆரம்பமாகியுள்ளது. இதன் ஷுட்டிங் சமீபத்தில் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சத்யாவுடன் சேர துடிக்கும் வருண்.. வில்லியாக மாறி பிரிக்கும் ஸ்ருதி!
மேலும், இந்த சீசனில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் யார்? என்ற பேச்சும் இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் பலரும் இளம் ஜோடியான சித்து - ஸ்ரேயா அஞ்சன் கண்டிப்பாக இதில் கலந்து கொள்வார்கள் என கணித்துள்ளனர். இன்னும் சில தீவிர ரசிகர்கள் அவர்கள் கண்டிப்பாக வர வேண்டும் அவர்கள் வந்தால் தான் நிகழ்ச்சியை பார்ப்பேன் எனவும் ஷாக் கொடுத்துள்ளனர்.
சித்து - ஸ்ரேயாவை தவிர இன்னும் சில ஜோடிகளின் பெயர்கள் ரசிகர்கள் லிஸ்டில் உள்ளது. அதில் குக் வித் கோமாளி புகழ் ஸ்ருத்திகா - அர்ஜூன், சமீபத்தில் திருமணம் ஆன அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி, நக்ஷத்ரா - ராகவ் பெயர்கள் உள்ளனர். இதில் யாரெல்லாம் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4ல் கலந்து கொள்ள போகிறார்கள், இவர்களை தவிர வேற எந்த ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர் போன்ற தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.