Home /News /entertainment /

செம்ம ஹாப்பியில் சித்து, ஸ்ரேயா ஜோடி.. அந்த குட் நியூஸ் என்ன தெரியுமா?

செம்ம ஹாப்பியில் சித்து, ஸ்ரேயா ஜோடி.. அந்த குட் நியூஸ் என்ன தெரியுமா?

சித்து - ஸ்ரேயா

சித்து - ஸ்ரேயா

சித்து - ஸ்ரேயா ஜோடி மீண்டும் இணைந்து நடிப்பார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்கள் நிஜ வாழ்க்கையில் இணைந்து ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் தந்தனர்.

    சித்து ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு, சித்துவுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதை மொத்த குடும்பமும் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் நடைப்பெற்ற விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் நடிகர் சித்து ராஜா ராணி 2 சீரியலுக்காக சிறந்த மகனுக்கான விருதை பெற்றுள்ளார்.

    கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற தொடர்களில் ஒன்று ‘திருமணம்’. இத்தொடரில் சந்தோஷ் மற்றும் ஜனனி கேரக்டர்களில் சித்து - ஸ்ரேயா ஜோடி நடித்திருந்தனர். இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. சீரியலைத் தாண்டி உண்மையிலும் இவர்கள் காதலர்களாகவே வலம் வந்தனர். கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த திருமணம் தொடர் 2020ஆம் ஆண்டு நிறைவு பெறுவதாக கலர்ஸ் தமிழ் அறிவித்தது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.

    சூப்பர் சிங்கர் பிரியங்காவுக்கு விஜய் டிவி செய்த காரியம்..இது நியாயமே இல்லை என சண்டை போடும் ரசிகர்கள்!

    திருமணம் தொடரின் முன்னணி கதாபாத்திரங்களான சித்து - ஸ்ரேயா ஜோடி மீண்டும் இணைந்து நடிப்பார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்கள் நிஜ வாழ்க்கையில் இணைந்து ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் தந்தனர். கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் பிரம்மாணடமாக நடைப்பெற்றது. திருமணத்திற்கு பிறகும் இருவரும் தங்களது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    சித்து தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் சரவணனாக நடித்து வருகிறார். அதே போல் ஸ்ரேயா, அன்புடன் குஷி சீரியலில் சில மாதங்கள் நடித்தார், அந்த சீரியல் முடிந்தவுடன் தற்போது ஜீதமிழில் ஒளிப்பரப்பாகும் ரஜ்னி சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சித்துவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. சமீபத்தில் நடைப்பெற்ற விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் நடிகர் சித்து ராஜா ராணி 2 சீரியலுக்காக சிறந்த மகனுக்கான விருதை பெற்றுள்ளார். இந்த நிகழ்வை சித்துவின் மனைவி ஸ்ரேயா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து கணவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

    உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் உள்ளதா? அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான்!

    கடந்த ஆண்டு நடைப்பெற்ற விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியிலும் சித்து விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி