Home /News /entertainment /

ஸ்ரேயா இல்லனா தப்பான வழியில் போயிருப்பேன்.. சீரியல் நடிகர் சித்து உருக்கம்!

ஸ்ரேயா இல்லனா தப்பான வழியில் போயிருப்பேன்.. சீரியல் நடிகர் சித்து உருக்கம்!

சித்து ஸ்ரேயா

சித்து ஸ்ரேயா

மனைவி ஸ்ரேயாவை பார்த்ததும் சித்து, கட்டிப்பிடித்து தனது காதலை பொழிகிறார்.

    சித்து - ஸ்ரேயா ஜோடியின் காதலுக்கு ஆதாரமாக மற்றொரு வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமணம் சீரியல், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து ரசிகர்களிடம் பரிச்சயமானார்கள்.திருமணம் சீரியல் மூலம் அவர்களுக்கு நிறைய ரசிகர் பட்டாளங்கள் உருவாகின. அதோடு இணையத்தில் அவர்களின் ரொமான்ஸ் வீடியோக்களும் படு ஹிட்டடித்தன. நன்றாக போய்க்கொண்டிருந்த திருமணம் சீரியல், கொரோனாவால் நிறைவு பெற்றது.ஆனால் அதில் நடித்த சித்து மற்றும் ஸ்ரேயா இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இந்த ரீல் ஜோடி ரியல் ஜோடி ஆக வேண்டும் என்ற ஆசை ரசிகர்களுக்கும் இருந்தது. கடைசியில் அது நடந்தது. இருவரும் கல்யாண பந்தத்தில் இணைந்தனர்.

    தமிழ் திரையை அலங்கரித்த நடிப்பின் ஓவியர் சிவக்குமார்!

    சித்து தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஸ்ரேயா அஞ்சன் விஜய் டிவி-யின் அன்புடன் குஷி தொடரில் ஹீரோயினாக நடித்தார். அந்த சீரியல் முடிந்தவுடன் தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் ரஜினி சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இருவரின் சீரியலும் டி.ஆர்.பியில் நல்ல ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. அதற்கான வாய்ப்பு தற்போது வரை அமையவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடந்த விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் ராஜா ராணி சீரியல் சரவணன் ரோலுக்காக சித்துக்கு விருது கொடுக்கப்பட்டது.

    என்னை மன்னித்து விடு.. கணவரிடம் மன்னிப்பு கேட்ட சுந்தரி கேப்ரில்லா!

    இந்த விஷயம் ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி இருந்தது. ஆனால் நிகழ்ச்சி போன வாரம் விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்டது. இந்நிலையில் இதுத்தொடர்பான மினி கிளிப் வீடியோ ஒன்று விஜய் டிவி யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சித்துக்கு சர்ப்பிரைஸாக எண்ட்ரி கொடுத்து விருது தருகிறார் அவரின் மனைவி ஸ்ரேயா. அவரைப் பார்த்ததும் சித்து, கட்டிப்பிடித்து தனது காதலை பொழிகிறார்.



    தொடர்ந்து பெசிய சித்து, ஸ்ரேயாவை பற்றி புகழ்ந்து தள்ளுகிறார். ஸ்ரேயா மட்டும் இல்லையென்றால் தப்பான வழியில் சென்று இருப்பேன் என்றும் அவர் என் வாழ்க்கையில் கிடைத்தது வரம் என்றும் பதிவு செய்கிறார். அதுமட்டுமில்லை 6 வருடமாக சித்து பேக் டான்சராக இருந்துள்ளார். 6 வருட கடின உழைப்புக்கு பிறகு தான் நடிகர் என்ற அந்தஸ்து அவருக்கு கிடைத்துள்ளது. இந்த விருது நிகழ்ச்சிக்கு முதலில் ஸ்ரேயாவை சித்து அழைத்த போது அவர் வரமாட்டேன் என்று கூறி இருக்கிறார்.

    இதனால் சித்து அப்செட் ஆகினாராம். ஆனால் ஸ்ரேயா அப்படி சொன்னது இந்த சர்ப்பிரைஸ் எண்ட்ரிக்கு தான் என்பது சித்துக்கு இப்போது தெரிந்து விட்டது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி