ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தல தீபாவளி முடித்த கையோடு குட் நியூஸ்.. சித்து - ஸ்ரேயா செம்ம ஹேப்பி!

தல தீபாவளி முடித்த கையோடு குட் நியூஸ்.. சித்து - ஸ்ரேயா செம்ம ஹேப்பி!

சித்து - ஸ்ரேயா

சித்து - ஸ்ரேயா

சித்து, ஸ்ரேயா இருவரும் அடிக்கடி தங்கள் புகைப்படங்கள், வீடியோஸ், ரீல்ஸ்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சமீபத்தில் தல தீபாவளி கொண்டாடிய சித்து - ஸ்ரேயா ஜோடிக்கு மற்றொரு மகிழ்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுக் குறித்து ஸ்ரேயா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் ஷேர் செய்துள்ளார்.

  சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து, இன்று ரியல் ஜோடியாக வலம் வருபவர்கள் திருமணம் சீரியல் புகழ் சித்து - ஸ்ரேயா. இந்த சீரியலில் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி, ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.தற்போது, சித்து விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஸ்ரேயா, ஜீ தமிழ் டிவியில் ரஜினி சீரியலில் நடிக்கிறார். ஸ்ரேயா அஞ்சன் ஏற்கெனவே அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர்கள், தங்களைப் பற்றிய அனைத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார்கள். அதோடு யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்.

  பிக் பாஸ் செல்வதற்கு முன்பு அந்த பிரபலத்திடம் ஆசீர்வாதம் வாங்கிய மைனா நந்தினி!

  சித்து, ஸ்ரேயா இருவரும் அடிக்கடி தங்கள் புகைப்படங்கள், வீடியோஸ், ரீல்ஸ்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் ஸ்ரேயாவை பின்தொடர்கின்றனர்.சமீபத்தில் கூட MG காரின் டாப் மாடலை சித்து சுமார் 23 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருந்தார். அதுமட்டுமில்லை சித்து பிறந்த நாளை மாலத்தீவில் கொண்டாட வைத்தார் ஸ்ரேயா. அவருக்காக ஸ்பெஷல் பிறந்த நாள் சர்ப்ரைஸூம் கொடுத்து இருந்தார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Sidhu (@sidhu_sid_official)  சமீபத்தில் இந்த ஜோடி தல தீபாவளி கொண்டாடி இருந்தனர். அந்த புகைப்படங்கள் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் சிறந்த நடிகர், நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. fab stars iconic award 2022 சார்பில் இந்த விருது இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளனர். ரசிகர்களும் இந்த ஜோடியை வாழ்த்தியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv