Sidhu-Shreya: மீண்டும் இணைந்து நடிக்கும் சித்து-ஸ்ரேயா அஞ்சன் ஜோடி!

சித்து - ஸ்ரேயா

சித்து மற்றும் ஸ்ரேயா இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. அவர்கள் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    ரியல் ஜோடி சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியல், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து ரசிகர்களிடம் பரிச்சயமானார்கள்.

    திருமணம் சீரியல் மூலம் அவர்களுக்கு நிறைய ரசிகர் பட்டாளங்கள் உருவாகின. அதோடு இணையத்தில் அவர்களின் ரொமான்ஸ் வீடியோக்களும் படு ஹிட்டடித்தன. நன்றாக போய்க்கொண்டிருந்த திருமணம் சீரியல், கொரோனாவால் நிறைவு பெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



     




    View this post on Instagram





     

    A post shared by Sidhu (@sidhu_sid_official)






    ஆனால் அதில் நடித்த சித்து மற்றும் ஸ்ரேயா இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. அவர்கள் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சித்து தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஸ்ரேயா அஞ்சன் விஜய் டிவி-யின் அன்புடன் குஷி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

    இதற்கிடையே இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது சேர்ந்து நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து மிர்ச்சி தமிழ் யூ-ட்யூப் சேனலில் ஒளிபரப்பாகும், ’குக் வித் காதல்’ என்ற வெப் தொடரில் நடிக்கவுள்ளனர். இதனை சித்து தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: