• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'ஏமாற்றுபவர்கள் முன்னேற மாட்டார்கள்...’ சமந்தா குறித்து சித்தார்த் மறைமுக பதிவு?

'ஏமாற்றுபவர்கள் முன்னேற மாட்டார்கள்...’ சமந்தா குறித்து சித்தார்த் மறைமுக பதிவு?

சித்தார்த் - சமந்தா

சித்தார்த் - சமந்தா

சித்தார்த்துடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த சமந்தா, அந்த உறவு முறிவுக்குப் பின் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துக் கொண்டார்.

  • Share this:
    நடிகை சமந்தா விவாகரத்து குறித்து ட்விட்டரில் மறைமுகமாக பதிவிட்டிருக்கிறார் நடிகர் சித்தார்த்.

    படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

    இந்து - கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா - சமந்தாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இதற்கிடையே சமந்தா கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. ஆனால் இது குறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. வெறும் வதந்தியாகவே இது முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர் சமந்தா - நாக சைத்தன்யா இருவரும்.

    தாங்கள் இருவரும் பிரிவதாக அவர்கள் அறிவித்தது, ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதோடு நாக சைத்தன்யா குடும்பத்தினர் ரூ.200 கோடி ஜீவனாம்சமாக வழங்க முன்வந்த நிலையில் அதை சமந்தா மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

    இந்நிலையில் சமந்தா கணவரை பிரிந்ததையடுத்து, ட்விட்டரில் மறைமுக பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் சித்தார்த். அதில், “பள்ளியில் ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடங்களில் ஒன்று... ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



    இதற்கிடையே சித்தார்த்துடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் சமந்தா. அந்த உறவு முடிவுக்கு வரவே பின்னர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: