Roja Serial: சன் டிவி ‘ரோஜா’ சீரியலை விட்டு விலகும் அர்ஜுன்?

சிபு சூர்யன்

ரோஜா சீரியலில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிபு சூர்யனும், ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்காவும் நடித்து வருகின்றனர்.

  • Share this:
    சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிபு சூர்யன், அத்தொடரிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ‘ரோஜா’ சீரியல் பலரது கவனத்தை ஈர்த்த முக்கியமான தொடர்களில் ஒன்றாகும். தற்போதைய சூழலில் தமிழ் சின்னத்திரை தொடர்களில் அதிக ரேட்டிங் பெறும் சீரியலும் இதுதான். ஒரு அனாதை பெண், பணக்காரர் ஒருவரை கான்ட்ராக்ட் மூலம் திருமணம் செய்துக் கொள்கிறார். இந்த திருமண பந்தத்தில் இணைந்த இருவருக்கும் நாளடைவில் காதல் உருவாகிறது. இதனிடையே நாயகி ரோஜாவை அழிக்க நினைக்கும் குடும்பத்திடம் இருந்து அவரை பாதுகாக்க நாயகன் அர்ஜுன் மேற்கொள்ளும் முயற்சிகளை மையப்படுத்தி ரோஜா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ரோஜா சீரியலில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிபு சூர்யனும், ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்காவும் நடித்து வருகின்றனர். வெவ்வேறு மொழியை சேர்ந்த இந்த ஜோடிக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த நடிகர் சிபு சூர்யன் இந்தத் தொடரை விட்டு விலகுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு திருமணமாகி விட்டதாகக் கூறி, சிபு சூர்யனின் பெயரில் இயங்கும் சமூக வலைதள பக்கங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தன. இதற்கிடையே சினிமாவில் கவனம் செலுத்தவிருக்கும் யோசனையில், ரோஜா சீரியலில் இருந்து சிபு சூர்யன் விலகுவதாக செய்திகள் தெரிவிக்கின்ற. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: