குக் வித் கோமாளி 3-வது சீசனின் டைட்டில் வின்னராக நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார்.
விஜய் டிவி-யின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஃபேவரிட்டாக இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியின் 3-வது சீசன் தற்போது முடிவடைந்துள்ளது. முதல் 2 சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சீசன் 3 தொடங்கப்பட்டது. இதில் போட்டியாளர்களாக அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ், ராகுல் தாத்தா, வித்யுலேகா ராமன், ரோஷினி ஹரிப்ரியன், தர்ஷன், அந்தோணி தாஸ், சந்தோஷ் பிரதாப், ஸ்ருதிகா அர்ஜுன் ஆகியோர் களம் இறங்கினர்.
எப்போதும் ஃபைனல்ஸுக்கு தான் பெரும்பாலும் சிறப்பு விருந்தினர்கள் வருவார்கள். ஆனால் இந்த சீசனில் ஃபைனல்ஸூக்கு முன்பே சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பல நட்சத்திரங்களும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி மாறியுள்ளது.
தேசிய விருது பெறும் சூர்யா சாருக்கும் எனது நண்பர் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்துகள் - நடிகர் தனுஷ்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பல்வேறு கட்ட போட்டிகளுக்கு பின்பு ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா, அம்மு அபிரமி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்கள். அவர்களை தொடர்ந்து வைல்டு கார்டு மூலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் கிரேஸ் கருணாஸ் ஃபைனல்ஸூக்கு தேர்வாகினர்.
இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி 3 டைட்டிலை நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் தட்டிச் சென்றுள்ளார். அவரை தொடர்ந்து முதல் ரன்னர்-அப்பாக தர்ஷனும், இரண்டாவது ரன்னர்-அப்பாக அம்மு அபிராமியும் இடம் பெற்றுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.