ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

7 நாட்கள் கல்யாணத்தை நடத்திய குக் வித் கோமாளி பிரபலம்!

7 நாட்கள் கல்யாணத்தை நடத்திய குக் வித் கோமாளி பிரபலம்!

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

7 நாட்களுக்கு லிஸ்ட் போட்டு அதற்கு ஷாப்பிங் செய்து பில்லை தீட்டி இருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தொடர்ந்து 7 நாட்கள் கல்யாணத்தை நடத்தி கணவர் அர்ஜூனை ஓட வைத்துள்ளார் குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிக்கா. இதை அவரே தனது யூடியூப் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

குக் வித் கோமாளி ஸ்ருதிக்கா பற்றி சோஷியல் மீடியா பிரியர்களுக்கு அறிமுகமே தேவை கிடையாது. சில வருடங்களுக்கு முன்பு சூர்யா, ஜீவா படங்களில் நடித்தவர் கல்லூரி படிப்புக்காக சினிமாவை விட்டு ஒதுங்கினார். அதன் பிறகு திருமணம், குழந்தை என பிஸியானவர் பல வருடம் கழித்து சமீபத்தில் யூடியூப்பில் வெளியான பேட்டி மூலம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனார். ஸ்ருதிக்காவின் பேட்டியை பார்த்த அனைவருக்கும் இந்த டயலாக் நினைவில் வந்து போயிருக்கும். “என்னா பொண்ணுப்பா” கொஞ்சம் கூட அலட்டல் இல்லாமல் சிரித்துக் கொண்டே, தன்னை தானே கலாய்த்து கொண்டு படு ஜாலியாக பேசியவரை ரசிகர்களுக்கு பிடித்து போனது.

கலர்ஸ் தமிழின் ’போட்டிக்கு போட்டி’ ... நடுவராக இணைந்த ஸ்ரீதர் மாஸ்டர்!

அதன் பின்பு கிட்டத்தட்ட யூடியூப்பில் இருக்கும் அனைத்து முன்னணி சேனல்களிலும் அவரின் பேட்டி வெளியானது. இன்ஸ்டாவில் அவரின் ஃபாலோவர்ஸின் எண்ணிக்கையும் அதிகமானது. பீக்கில் இருந்தவரை அப்படியே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து  டி.ஆர்.பியை ஏற்றியது விஜய் டிவி. குக்  வித் கோமாளி சீசன் 3ல் தனது சமையல் திறமையை வெளிப்படுத்திய ஸ்ருதிக்கா முதல் ஃபைனலிஸ்டாக இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். குக் வித் கோமாளி மூலம் ஸ்ருதிக்காவை விட அவரின் கணவர் அர்ஜூன் பயங்கர ஃபேமஸ் ஆனார்.

பாவ்னியை இப்படி மாற்றியதே அமீர் தான். உண்மையை போட்டுடைத்த பிக் பாஸ் பாவ்னியின் அக்கா!

’அர்ஜூன் அம்மா’ என்ற பெயர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. இப்போது ஸ்ருதிக்கா - அர்ஜூன் இருவரும் சேர்ந்து தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் இருவரும் சேர்ந்து முதன் முதலாக தங்களது கல்யாண  ஆல்பத்தை பார்க்கும் WEDDING THROWBACK வீடியோவை யூடியூப்பில் ஷேர் செய்துள்ளனர்.

இந்த வீடியோவில் இருவரும் பல விஷயங்களை ஷேர் செய்துள்ளனர். குறிப்பாக காதல், கல்யாணம் என 12 வருடத்திற்கு முன்பு நடந்த அனைத்து விஷயங்களையும்  அதே ரசனை, காதலுடன் இருவரும் ஷேர் செய்த விதம் செம்ம க்யூட்டாக உள்ளது. ஒரு விஷயம் தெரியுமா? ஸ்ருதிக்கா அடம் பிடித்து அவரின் அப்பாவிடம் கெஞ்சி, தனது கல்யாணத்தை 7 நாட்கள் நடத்தி இருக்கிறார். மெஹந்தி, சங்கீத், ரிசப்ஷன், பார்ட்டி, முகூர்த்தம் என 7 நாட்களுக்கு லிஸ்ட் போட்டு அதற்கு ஷாப்பிங் செய்து பில்லை தீட்டி இருக்கிறார்.

' isDesktop="true" id="768945" youtubeid="tg2Tqn9vbnE" category="television">

மும்பைக்கு சென்று அதற்காக ஷாப்பிங் செய்தாராம். அதுமட்டுமில்லை அவரின் முகூர்த்த பட்டு மாம்பழ கலரில் தான் இருக்க வேண்டும் என ஒரு நாள் முழுவதும் காஞ்சிபுரம் பட்டு கடைகளில் அலைந்து இருக்கிறார். வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் ஸ்ருதிக்கா  கேட்ட அனைத்தையும் அவரின் அப்பா செய்து கொடுத்துள்ளார். இதில் அர்ஜூனும் தனது பரிதாப கதையை பதிவு செய்து இருக்கிறார்.

ஸ்ருதிக்கா குடும்பம், அர்ஜூனை இரவு முழுவதும் தூங்கவே விடவில்லையாம். 2 மணிக்கு காபி கொடுத்து தூங்க விடாமல் செய்து ஸ்ருதிக்கா கழுத்தில் தாலி கட்ட வைத்தார்களாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Cook With Comali Season 2, Television, Vijay tv