• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு பதில் புதிய தொகுப்பாளர் இவர் தான்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு பதில் புதிய தொகுப்பாளர் இவர் தான்?

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நடிகர் கமல் ஹாசன் நேற்று ட்விட்டரில் தெரிவித்தார்.

  • Share this:
    நடிகர் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அவருக்கு பதில் இனி யார் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் தனது ஒளிபரப்பை தொடங்கியது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் 5-ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 4 சீசன்களைப் போல இந்த சீசனையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

    இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதில் நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதோடு சில தினங்களுக்கு முன்னர் அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.

    இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நடிகர் கமல் ஹாசன் நேற்று ட்விட்டரில் தெரிவித்தார். இதனால் தன்னை மருத்துவமனையில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் கமல். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் அடுத்ததாக தொகுத்து வழங்குவார்களென்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.



    Shruti Haasan to replace Kamal Haasan in Bigg Boss Tamil 5, bigg boss kamal replacement, பிக் பாஸ் ஸ்ருதி ஹாசன், கமல் ஹாசன் கொரோனா தொற்று, bigg boss tamil 5, bigg boss 5, bigg boss kamal haasan, vijay tv bigg boss, bigg boss contestant, bigg boss tamil, விஜய் டிவி பிக் பாஸ், பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் 5, கமல் ஹாசன், பிக் பாஸ் விஜய் டிவி, bigg boss kamal haasan, bigg boss kamal haasan salary, kamal haasan wife, bigg boss contestants 2021, bigg boss 5 contestants in tamil, bigg boss 15, kamal haasan movies, kamal haasan daughter, kamal haasan wife, kamal haasan second wife, kamal haasan age, kamal haasan family, kamal haasan children,
    கமல் - ஷ்ருதி


    இதற்கிடையே கமலின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சூர்யா, ரம்யா கிருஷ்ணன் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: