முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஷ்ரேயாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!

ஷ்ரேயாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!

ஷ்ரேயா

ஷ்ரேயா

Shriya Saran தான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த விஷயத்தை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் ஷ்ரேயா.

  • 1-MIN READ
  • Last Updated :

நடிகை ஷ்ரேயாவின் சமீபத்திய வீடியோ ரசிகர்களை ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிவாஜி தி பாஸ், கந்தசுவாமி, ரெளத்திரம் மற்றும் பல திரைப்படங்களில் நடிகை ஷ்ரேயா சரண் தனது சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவர் கடைசியாக 2018-ல் திரைப்படங்களில் நடித்தார். பின்னர் திருமணம் செய்துக் கொண்ட அவர், அதன் பிறகு முழு நேர நடிப்புக்கு கொஞ்சம் பிரேக் கொடுத்திருக்கிறார்.

ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோசீவை திருமணம் செய்துக் கொண்ட ஷ்ரேயா, பார்சிலோனாவில் செட்டில் ஆனார். பின்னர் சமீபத்தில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் ஷ்ரேயா, ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு, அடிக்கடி படங்களையும் வீடியோக்களையும் அதில் பகிர்ந்து வருகிறார்.

தற்போது ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால், தான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த விஷயத்தை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். தான் சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்தையும் ரசிகர்களுடன் மறக்காமல் பகிர்ந்துக் கொள்ளும் ஷ்ரேயா இந்த விஷயத்தை எப்படி சீக்ரெட்டாக மெயிண்டெயின் செய்தார் என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
 
View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)முக்கியமான விஷயம் என்னவென்றால், ஷ்ரேயாவின் குழந்தை பிறந்து பல மாதங்களாகியிருப்பதாக தெரிகிறது. ஆனால் இதை இப்போது தான் அறிவித்திருக்கிறார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actress Shriya