Home /News /entertainment /

கணவர் விஜய் டிவி.. மனைவி ஜீ டிவி.. எந்த சேனலை ரசிகர்கள் பார்ப்பார்கள்?

கணவர் விஜய் டிவி.. மனைவி ஜீ டிவி.. எந்த சேனலை ரசிகர்கள் பார்ப்பார்கள்?

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் விரைவில் "ரஜினி" என்ற பெயரில் புத்தம் புதிய மெகா சீரியலை ஒளிபரப்ப உள்ளது

    தமிழ் சின்னத்திரையில் ஏராளமான பிரபல சேனல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. நாங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் மற்றும் ஷோக்களை டெலிகாஸ்ட் செய்து ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றன. காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதற்கு ஏற்ப எத்தனை எத்தனை டிவி சேனல்கள் வந்தாலும், வெரைட்டியாக ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பினாலும் அவற்றில் தவறாமல் இடம் பெறும் ஒன்று தான் சீரியல்கள்.

    முன்பெல்லாம் சீரியல்கள் என்றாலே ஆண்களை வேலைக்கும், குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பி வைத்து விட்டு பெண்கள் மட்டுமே பார்க்க கூடியது என்ற பிம்பம் இருந்தது. ஆனால் இந்த நிலை மாறி ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நடுத்தர வயதினர், டீனேஜர்ஸ் என அணைத்து தரப்பினரும் சீரியல்களை விரும்பி பார்த்து ரசிப்பதில் சின்னத்திரை சீரியல்களுக்கு வெள்ளித்திரை திரைப்படங்களை போலவே உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே அனைத்து முன்னணி சேனல்களும் விறுவிறுப்பான மற்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் கூடிய சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்களை கவருவதில் குறியாக செயல்பட்டு வருகின்றன.

    வழக்கம் போல சீரியல்களுக்கு சாதாரணமாக பெயர்களை வைக்காமல் திரைப்படங்களின் பெயர்களை வைக்கும் வழக்கமும் சில ஆண்டுகளாக ட்ரெண்டாக இருக்கிறது. சேனல்கள் எதிர்பார்ப்பது போல திரைப்படங்களின் பெயர்களை தாங்கி வரும் சீரியல்கள் சூப்பர் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து விடுகின்றன. முன்னணி சேனல்களில் ஒன்றான ஜீ தமிழ் விரைவில் "ரஜினி" என்ற பெயரில் புத்தம் புதிய மெகா சீரியலை ஒளிபரப்ப உள்ளது. இதற்கான ப்ரமோ வீடியோவை சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளது ஜீ தமிழ்.

    எல்லோரும் திரைப்படங்களின் பெயர்களை டைட்டிலாக வைக்கும் நேரத்தில் இவர்கள் உச்ச நடிகரின் பெயரை டைட்டிலாக வைத்துள்ளார்களே என்ற ஆர்வத்தில் பல ரசிகர்கள் ப்ரமோவை பார்த்தனர். ஆனால் இறுதியில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி உள்ளனர். ஏனென்றால் இந்த சீரியலின் கதை களம் ரசிகர்களுக்கு புதிதல்ல. குடும்பத்தை ஒற்றை ஆளாக இருந்து காப்பாற்றும் ஒரு இளம் பெண்ணின் கதையை ரஜினி சீரியலின் ப்ரமோ காட்டுகிறது. இந்த சீரியலில் பிரபல சீரியல் நடிகை ஸ்ரேயா அஞ்சன் தான் ஹீரோயின். ஆனால் இதே போன்ற கதையை மையமாக வைத்து தான் சன் டிவி-யில் கயல் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by zeetamil (@zeetamizh)






    கிட்டத்தட்ட 90%-க்கும் மேல் கயலின் கதையை போலவே தான் ரஜினி சீரியலின் கதையும் ப்ரமோவில் காட்டப்படுகிறது. என்ன கயல் சீரியலில் ஹீரோயின் நர்ஸாக வேலை பார்க்கிறார், இந்த சீரியலில் ஹீரோயின் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பது போல காட்டப்படுள்ளது. ரஜினி சீரியலின் ப்ரமோவை பார்த்த பல ரசிகர்கள் கயல் சீரியலின் காப்பி போலவே உள்ளதாக வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் சில ரசிகர்கள் ஜீ தமிழ் சேனலுக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது அவுட்புட் எப்படி வருகிறது என்று பார்ப்போம் என்று ஆர்வம் தெரிவித்து உள்ளனர்.

    ஸ்ரேயாவின் கணவர் சித்து விஜய் டிவி சீரியலில் நடித்து வரும் நிலையில் தற்போது ஸ்ரேயா ஜீ தமிழில் ஹீரோயின் ஆகிவிட்டார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Zee tamil

    அடுத்த செய்தி