ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

காதல் கணவர் சித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் பரிசா.. கலக்கிய ஸ்ரேயா அஞ்சன்!

காதல் கணவர் சித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் பரிசா.. கலக்கிய ஸ்ரேயா அஞ்சன்!

சித்து - ஸ்ரேயா

சித்து - ஸ்ரேயா

நடிகர் சித்து சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  காதல் கணவர் சித்து பிறந்த நாளுக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார் ஸ்ரேயா அஞ்சன். இதுக் குறித்து சித்து வெளியிட்டுள்ள இன்ஸ்டா போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  2018-ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து ரசிகர்களிடம் பரிச்சயமானார்கள். இவர்களது காம்பினேஷன் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.திருமணம் சீரியல் மூலம் அவர்களுக்கு நிறைய ரசிகர் பட்டாளங்கள் உருவாகின. அதோடு இணையத்தில் அவர்களின் ரொமான்ஸ் வீடியோக்களும் படு ஹிட்டடித்தன. இதையடுத்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த ஆண்டு இந்த ஜோடி திருமணம் செய்துக் கொண்டது.

  கோபி - ராதிகா கல்யாணம்.. பாக்கியலட்சுமியில் பரபரப்பு ட்விஸ்ட்!

  சித்து விஜய் தொலைக்காட்சியின் ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோவாகவும், ஜனனி ஜீ தமிழ் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லை சித்து கூடிய விரைவில் வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர்கள், தங்களைப் பற்றிய அனைத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார்கள். அதோடு யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்.


  இந்த ஜோடிக்கு சமூவலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சீரியலிலும் இவர்கள் நடிப்பு ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளி வருகிறது. இந்நிலையில் நடிகர் சித்து சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அவரின் பிறந்த நாளை ஸ்ரேயா பிரம்மாண்டமாக கொண்டாட பிளான் செய்து சித்துவை மாலத்தீவுக்கு அழைத்து சென்று இருக்கிறார். அதுமட்டுமில்லை அங்கு கடற்கரையை ரசித்தப்படியே கேண்டில் லைட்  டின்னருக்கு ஏற்பாடு செய்து சித்துவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Sidhu (@sidhu_sid_official)  சர்ப்ரைஸ் இன்னும் முடியல, பிறந்த நாள் பரிசாக சித்துக்கு ஐபோன் ஒன்றையும் ஸ்ரேயா வாங்கி தந்துள்ளார். இந்த அழகான தருணத்தை சித்து தனது இன்ஸ்டாவில் வீடியோவாக வெளியிட்டு ஸ்ரேயாவுக்கு நன்றி மற்றும் ஐ லவ் யூ சொல்லி நெகிழ வைத்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv, Zee tamil