நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுடனான உரையாடலில் தான் விரும்பிப் பார்க்கும் சீரியல்களை குறிப்பிட்டுள்ளார் நடிகர் விஜய்யின் அம்மாவும், பாடகியுமான ஷோபா சந்திரசேகர்.
விஜய்யின் நட்சத்திர அந்தஸ்துக்கு அளவே இல்லை. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் அவர் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக திகழ்கிறார். அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், பிரபல இயக்குநராக இருந்தவர், இப்போதும் படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். அம்மா ஷோபா சந்திரசேகர் பாடகி, கதையாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.
அதோடு ஷோபா தனது மகன் விஜய்யுடன் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை சூப்பர்ஹிட் பாடல்கள். விஜய்யும் ஷோபாவும் இணைந்து ஒரு விளம்பரத்தில் கூட நடித்துள்ளனர், அது விஜய் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கிறது.
உங்க வாழ்க்கைல குணசேகரன் இல்லைன்னா... எதிர்நீச்சல் ஹரிப்ரியா ஷேரிங்ஸ்!
இந்நிலையில் பிரபல இணையதளம் ஒன்றில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுடனான உரையாடல் ஒன்றில் தனக்குப் பிடித்த சீரியல்களைப் பற்றி பகிர்ந்துக் கொண்டார் ஷோபா. அதில் சன் டிவி-யில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அதைத் தொடர்ந்து பார்ப்பதாகவும் பகிர்ந்துக் கொண்டார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி ஆகிய சீரியல்களும் பிடிக்கும் என்றும், அதன் பிறகு டிவி-யை ஆஃப் செய்து விடுவேன் என்றும் கூறினார் ஷோபா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.