ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Big boss 4 | பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன்.. சக போட்டியாளர்களால் மனமுடைந்த ஷிவானி..

Big boss 4 | பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன்.. சக போட்டியாளர்களால் மனமுடைந்த ஷிவானி..

ஷிவானி

ஷிவானி

  • News18
  • 2 minute read
  • Last Updated :

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களால் மனமுடைந்த ஷிவானி தன் கையில் மொத்தம் 9 ஹார்ட் ப்ரேக் இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசன் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிலையில் நேற்று முதல் நாள் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், இன்றைய காட்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், தன் கையில் மொத்தம் 9 ஹார்ட் ப்ரேக் இருப்பதாக ஷிவானி வருத்தமாக கூறுகிறார்.

அப்போது அவரருகே இருந்த பாலாஜி முருகதாஸ் மற்றும் சோம் ஆகியோர் அவரை சமாதானப்படுத்துகின்றனர் . சோம், 'ஜாலியாக இருங்க ஷிவானி, உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் எவ்ளோ ரசிகர்கள் இருக்காங்க, அவங்களாம் என்ன நெனைப்பாங்க சொல்லுங்க' என சொல்கிறார்கள். அதன் பின் ஷிவானி நடிகர் ஆரி உடன் பேசிக்கொண்டு இருக்கும்போது, 'நான் எந்த கேம் பிளான் இல்லாமல் தான் வந்து இருக்கேன். எனக்கு தோன்றுவது என்ன, எனக்கு வருவதை தான் பண்ணிக்கொண்டு இருக்கேன்' என கூறுகிறார்.

அப்போது ஆரி 'டெய்லி 4 மணிக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ போடுறீங்க இல்ல.. என்ன ஆகணும் என்பதற்காக அதை போடுறீங்க' என ஷிவானியிம் கேட்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஷிவானியை ஒரு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்கின்றனர். தனது புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்து வந்த ஷிவானி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான முதல் நாள் காட்சிகளில் ஷிவானியை மற்ற போட்டியாளர்கள் பலர் டார்கெட் செய்வது தெரிந்தது. நேற்று நாமினேஷனின் ஒத்திகை ஒன்று நடந்தது.

அதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தனக்கு பிடித்தவர்களுக்கு ஹார்ட் மற்றும் பிடிக்காதவர்களுக்கு ஹார்ட் ப்ரேக் கொடுக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் கூறினார். மேலும் அதற்கான காரணத்தையும் விளக்க வேண்டும் என கூறப்பட்டது. அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் ஷிவானிக்கு தான் ஹார்ட் ப்ரேக் கொடுத்தனர். ஷிவானி மற்ற போட்டியாளர்களுடன் சரியாக பழகவில்லை, தனியாகவே இருக்கிறார் என்பதையே பெரும்பாலானோர் காரணமாக கூறி இருந்தனர்.

Also see... ரம்யமாய் காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன் - நியூ போட்டோஸ்

அதற்கு ஷிவானி எனக்கு புதிய நபர்களுடன் பழக சில நாட்கள் தேவை என கூறியிருந்தார். அதேபோல நடிகர் ஆரி ஏராளமான ஹார்ட் சிம்பலை பெற்றார். இதனையடுத்து ஷிவானி தனது கையில் அதிக அளவு ஹார்ட் ப்ரேக் இருப்பதால் மனமுடைந்து இருப்பது இன்றைய ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது. மேலும் இன்று நாமினேஷன் இருக்கும் என பிக் பாஸ் அறிவித்துள்ள நிலையில் இன்று ஏராளமானோர் ஷிவானியை நாமினேஷன் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஷிவானி ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 4