ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அடுத்த 1 வாரத்திற்கு ட்ரெண்டிங்கில் இருக்க போவது பிக் பாஸ் ஷிவானி தான்!

அடுத்த 1 வாரத்திற்கு ட்ரெண்டிங்கில் இருக்க போவது பிக் பாஸ் ஷிவானி தான்!

ஷிவானி நாராயணன்

ஷிவானி நாராயணன்

ஷிவானி முதன் முறையாக தன்னுடைய பாடலுக்கு டான்ஸ் ஆடி இன்ஸாவில் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இன்ஸ்டாகிராம் ரசிகர்களால் ‘4 மணி’ ஷிவானி என அன்போடு அழைக்கப்படும் ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

சின்னத்திரை டூ வெள்ளித்திரை ஸ்டார் ஷிவானி சினிமாவில் நுழைந்த கதை அனைவரும் அறிந்த ஒன்று. இன்ஸ்டாவில் கலர்ஃபுல் படங்களை வெளியிட்டவர், அவ்வப்போது டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிடுவார். இவரின் நடன திறமையை கண்டு வியந்து போன ரசிகர்கள் ஏன் சினிமாவில் நடிக்க கூடாது? என்று அடிக்கடி கேட்பார்கள். வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றார் ஷிவானி. இன்ஸ்டாவுக்கு முன்பு டிக் டாக்கில் டப்மேஷ் செய்தும் ஷிவானி கலக்கி இருக்கிறார். இளைஞர்களின் சோஷியல் மீடியா க்ரஷாக இருந்த ஷிவானிக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் திருமணம் இந்த காரணத்தினால் நின்றதா?

பகல் நிலவு சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தவர், இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் நடித்தார். அதன் பின்பு பிக் பாஸ் வாய்ப்பு அவரை தேடி வந்தது. கண்டிப்பாக ஷிவானியின் என்ட்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேற மாதிரி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிச்சம். ஷிவானியின் பங்களிப்பு பிக் பாஸில் துளியும் இல்லை. இதனால் ரசிகர்கள் தங்களது அதிரூப்தியை வெளிப்படுத்தி  இருந்தனர்.

அதே சமயம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பு ஷிவானிக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அடுத்தடுத்த மூவிகளில் கமிட் ஆனார். இந்நிலையில் ஷிவானி நடித்த படங்கள் இந்த ஆண்டு திரைக்கு வர தொடங்கியுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் படம் ஜூன் 3ஆம் தேதி வெளியானது. இதில் விஜய்சேதுபதி மனைவியாக ஷிவானி நடித்து இருந்தார். அடுத்ததாக இன்றைய தினம், ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

15 வருட உழைப்பு.. விஜய் டிவி அமுதவாணனுக்கு நடிகர் சத்யராஜ் கொடுத்த அங்கீகாரம்!

இந்த படத்தில் ஷிவானி ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார். கல்யாண பாட்டு என தொடங்கும் அந்த பாடல் தான் சோஷியல் மீடியாவில் லேட்டஸ் ட்ரெண்ட். இதுவரை எத்தனையோ நடிகர், நடிகைகளின் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வெளியிட்ட ஷிவானி முதன் முறையாக தன்னுடைய பாடலுக்கு டான்ஸ் ஆடி இன்ஸாவில் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.


வீட்டில் இருக்கும் டிவியில் அந்த பாடலை பிளே செய்துவிட்டு, மெட்டுக்கு ஏற்ற அதே நடன அசைவுகளை லைவில் ஆடி இன்ஸாவில் பதிவு செய்துள்ளார் ஷிவானி. இந்த வீடியோ மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. அடுத்த 1 வாரத்திற்கு கல்யாண பாட்டும், ஷிவானியின் இந்த வீடியோவும் தான்  இன்ஸ்டாவில் ட்ரெண்டிங்கில் இருக்க போவது உறுதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil, TV Serial, Vijay tv