Home /News /entertainment /

மீண்டும் வந்த ‘4 மணி ஷிவானி’.. அந்த ஃபோட்டோவை பார்த்தீங்களா?

மீண்டும் வந்த ‘4 மணி ஷிவானி’.. அந்த ஃபோட்டோவை பார்த்தீங்களா?

 பிக்பாஸ் ஷிவானியின் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் ஷிவானியின் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் ஷிவானியின் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  பிரபலங்கள் சோசியல் மீடியாவில் வைரலாவது வழக்கம். ஆனால் சோசியல் மீடியா மூலமாகவே இளசுகள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இஸ்டாகிராம், ட்விட்டரில் ஷிவானி போட்ட வீடியோவை பார்த்து அடித்தது ஜாக்பாட். விஜய் தொலைக்காட்சியின் பகல் நிலவு சீரியல் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு, நடிப்பில் தூள் கிளப்பிய ஷிவானி தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

  இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் சீரியலில் இரட்டை வேடத்தில் களமிறங்கினார். பகல் நிலவு சீரியலைத் தொடர்ந்து நடிகர் அசீம் உடனும் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்க ஆரம்பித்ததால், இருவருக்கும் இடையில் காதல் கெமிஸ்ட்ரி வொர்க் ஆகிவிட்டதாக வதந்தி கிளம்பியது. இதனால் செம்ம அப்செட்டான ஷிவானி சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார்.

  சீரியவில் இருந்து வெளியேறிய சில நாட்களிலேயே இன்ஸ்டாகிராமின் முடிசூடா ராணியாக மாறிய ஷிவானி, 4 மணிக்கு கலர், கலராக போட்டோ போட்டு, இளைஞர்களை கிறுக்கு பிடிக்க வைத்தார். புடவையில் கூட தினுசு, தினுசாக கவர்ச்சி காட்டி மிரளவைத்தார். உடலை இறுக்கிப்பிடித்திருக்கும் மார்டன் உடைகளில் தோன்றி சோசியல் மீடியாவை மிரள வைத்தார்.
  ரசிகர்களால் ‘4 மணி ஷிவானி’ செல்லப்பெயர் வைக்கும் அளவிற்கு பிரபலமானவர், திடீரென ஜீ தமிழில் இரட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு கதாபாத்திரத்திலும் மாஸ் காட்டி வந்த ஷிவானி, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததால் சீரியலை விட்டு விலகினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானியின் பெர்பாமென்ஸை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.ஆனால் இவரோ பாலாஜி முருகதாஸ் பின்னால் சுற்றுவதையே வேலையாக வைத்திருந்ததால் ரசிகர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

  இதையும் படிங்க.. 7வது மாச வளைகாப்பும் முடிந்தது.. ராஜா ராணி 2வில் இருந்து கிளம்புகிறாரா ஆல்யா மானசா?

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்ததுமே இன்ஸ்டாகிராமில் இருந்து ஓவர் கிளாமராக இருந்த போட்டோக்களை எல்லாம் டெலிட் செய்த ஷிவானி, அதன் பின்னர் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக போட்டோ போட்டு, அட இது நம்ப ஷிவானி தானா? என ரசிகர்களை மிரளவைத்தார். ஆனால் அதுவும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் கவர்ச்சி களத்திற்கு தாவிய ஷிவானி, இன்ஸ்டாகிராமில் தனக்காக காத்திருக்கும் 3 மில்லியன் ரசிகர்களை கிளாமர் கிளிக்ஸ்களை தட்டிவிட்டு, சோஷியல் மீடியா குயினாக வலம் வருகிறார்.
  இன்ஸ்டாகிராமின் இளவரசி என ரசிகர்கள் கொண்டாடும் ஷிவானி நாராயணன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. கறுப்பு கலர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், அதனை எடுப்பாக காட்டும் கோல்டன் கலர் புடவை என சற்றே கவர்ச்சி தூக்கலாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். சிம்பிள் மேக்கப், காதில் கவனம் ஈர்க்கும் பெரிய தோடு அணிந்து இடையை வளைத்து, நெளித்து ஷிவானி கொடுத்திருக்கும் ஒவ்வொரு போஸும் லைக்குகளை வாரிக்குவித்து வருகிறது.

  கேரியரைப் பொறுத்தவரை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், பஹித் பாசில், விஜய்சேதுபதி நடித்து வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 4, TV Serial, Vijay tv

  அடுத்த செய்தி