கவர்ச்சி குத்தாட்டத்திற்கு பெயர் போன இன்ஸ்டாகிராம் இளவரசி ஷிவானி நாராயணன் அரபிக்குத்து பாடலுக்கு போட்டுள்ள ஆட்டம் சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.
சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் சோசியல் மீடியாவில் பிரபலமாகும் காலம் மாறி, சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கிகாக வலம் வருபவர்கள் பிரபலங்களாக மாறி வருகின்றனர். அப்படி இன்ஸ்டாகிராம் மூலமாக பிரபல விஜய் தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தவர் ஷிவானி. விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு சீரியல் மூலமாக அறிமுகமான ஷிவாங்கி, கடைக்குட்டி சிங்கம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரட்டை ரோஜா ஆகிய சீரியல்கள் மூலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். அதன் மூலம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவானி அங்கு சொல்லிக்கொள்ளும் படி எதையும் செய்யாததால், ரசிகர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ‘விக்ரம்’, வடிவேலுவுடன் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, நடிகர் வெற்றிக்கு ஜோடியாக ‘பம்பர்’, பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ரீமேக் படம் என அடுத்தடுத்து செம்ம பிஸியாக நடித்து வருகிறார். என்ன தான் சினிமாவில் பிசியாக இருந்தாலும், ‘4 மணி ஷிவானி’ என்ற செல்லப்பெயரை தக்க வைக்கும் விதமாக ஹோம்லி டூ கிளாமர் என அனைத்து விதமான போட்டோ ஷூட்களையும் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சித்து-ஸ்ரேயா வீட்டில் விசேஷம்... குவியும் வாழ்த்துகள்!
சமீபத்தில் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஸ்ரீவள்ளி பாடலுக்கு ஷிவானி போட்ட ஸ்டேப் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. அதனைத் தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டெ, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ள அரபிக்குத்து பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்-மாரி செல்வராஜ் கூட்டணியில் மாமன்னன்!
அரபிக்குத்து பாடல் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. குட்டீஸ் முதற்கொண்டு பாட்டீஸ் வரை பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஷிவானி ரொம்ப லேட்டாக வீடியோ வெளியிட்டதால் ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர். போதாக்குறைக்கு ஸ்டேப் ஒன்னும் சிறப்பாக இல்லை என சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால் வழக்கம் போலவே இன்ஸ்டாகிராமில் ஷிவானி வெளியிட்டுள்ள இந்த வீடியோ ஒன்றரை லட்சம் வியூஸ்களைக் கடந்து வைரலாகி வருகிறது.
அனிரூத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியான அரபிக்குத்து பாடல் பட்டி, தொட்டி எல்லாம் கடந்து பாரீன் வரை கலக்கி வருகிறது. இதுவரை அரபிக்குத்து பாடலை 126 மில்லியன் பேர் கண்டுகளித்துள்ளனர், 4 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.