ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இதற்கு முன்பு பிக் பாஸ் ஷிவானியை இப்படி பார்த்து இருக்கவே மாட்டீங்க! வைரல் வீடியோ

இதற்கு முன்பு பிக் பாஸ் ஷிவானியை இப்படி பார்த்து இருக்கவே மாட்டீங்க! வைரல் வீடியோ

ஷிவானி நாராயணன்

ஷிவானி நாராயணன்

ஷிவானியை நேரில் சந்தித்த ரசிகர் ஒருவர், அவருக்கு பென்சிலால் வரைந்த ஓவியத்தை பரிசளித்ததோடு, அதில் அவரது அழகை வர்ணித்து கவிதை ஒன்றையும் எழுதியுள்ளார்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  பிக்பாஸ் ஷிவானியை நேரில் காண வந்த ரசிகர் ஒருவர் அவருக்கு அசத்தலான கிப்ட் ஒன்றை பரிசளித்ததோடு, அவரது அழகையும் புகழ்ந்து கவிதை ஒன்றைப் பாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  இன்ஸ்டாகிராம், டிக்-டாக் போன்ற சோசியல் மீடியா மூலமாக கிடைத்த எக்கசக்கமாக பிரபலமடைந்ததால் விஜய் தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தவர் ஷிவானி. விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு சீரியல் மூலமாக அறிமுகமான ஷிவாங்கி, கடைக்குட்டி சிங்கம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரட்டை ரோஜா ஆகிய சீரியல்கள் மூலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். அதன் மூலம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவானி அங்கு சொல்லிக்கொள்ளும் படி எதையும் செய்யாததால், ரசிகர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த மாதிரி ஆண்கள் தான் காரணம்.. நடிகை குஷ்புவின் கோபத்துக்கு என்ன காரணம்?

  பிக்பாஸ் வீட்டிற்குள் எதுவுமே செய்யவில்லை என்றாலும், இன்ஸ்டாகிராமில் வளைத்து வளைத்து போட்டோ போட்டதற்கு பலனாக ஷிவானிக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ‘விக்ரம்’, வடிவேலுவுடன் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். நடிகர் வெற்றிக்கு ஜோடியாக ‘பம்பர்’, பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ரீமேக் படம் என அடுத்தடுத்து செம்ம பிசியாக நடித்து வருகிறார்.

  பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இப்படியொரு நிலைமையா?

  சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபலமாக இருந்தாலும், ஷிவானிக்கு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள் பட்டாளம் தான் ஏராளம். அதனால் தான் என்ன பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் போட்டோ பதிவிடுவதை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறார். புடவையில் கூட தினுசு, தினுசாக கவர்ச்சி காட்டி மிரளவைத்தார். உடலை இறுக்கிப்பிடித்திருக்கும் மார்டன் உடைகளில் தோன்று சோசியல் மீடியாவை மிரள வைத்து விடுகிறார்.

  அவ்வப்போது ரசிகர்களுக்கு போனஸாக ஹிட் பட பாடல்களுக்கு கலக்கலாக நடனமாடும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இதனால் ஷிவானிக்கு ஃபேன் பேஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அப்படிப்பட்ட வெறித்தனமான ரசிகர்களில் ஒருவர் ஷிவானியை நேரில் சந்தித்து அசத்தலான கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தற்போது ஷிவானி நாராயணன் தூத்துக்குடியில் படப்பிடிப்பில் உள்ளார்.

  ' isDesktop="true" id="735002" youtubeid="R_yrWkTrU_g" category="television">

  படப்பிடிப்பு தளத்தில் ஷிவானியை நேரில் சந்தித்த ரசிகர் ஒருவர், அவருக்கு பென்சிலால் வரைந்த ஓவியத்தை பரிசளித்ததோடு, அதில் அவரது அழகை வர்ணித்து கவிதை ஒன்றையும் எழுதியுள்ளார். ஷிவானி அந்த கவிதையை படித்து காட்டுறீங்களா? எனக்கேட்க, அவர் குணா கமல் ஸ்டைலில் பாடியே காட்டியுள்ளார். அழகை வர்ணித்து அந்த ரசிகர் பாட, அதனை ஷிவானி புன்னகையுடன் ரசித்து கேட்க என கலகலப்பான அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு ஷிவானி இப்படி வெட்கப்பட்டு பார்த்த இல்லை என்கின்றனர் ரசிகர்கள்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 4, TV Serial, Vijay tv