Shivani Narayanan: அன்புக்குரியவரின் பிறந்தநாள் - பிரமாண்டமாகக் கொண்டாடிய ஷிவானி!

ஷிவானி நாராயணன்.

பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த அவர், வெளியே வந்த பின்பு மீண்டும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

  • Share this:
    தனது செல்லப் பிராணியின் முதல் பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாடியிருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஷிவானி தனது கலர் ஃபுல்லான படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதோடு நடன வீடியோக்களையும் பகிர்ந்துக் கொள்கிறார்.

    shivani narayanan celebrates her pet's 1st birthday
    ஷிவானி நாராயணன்


    இதற்கிடையே பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற ஷிவானி மீது ஒரு வித எதிர்பார்ப்பு இருந்தது. இறுதி வாரம் வரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த அவர், வெளியே வந்த பின்பு மீண்டும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அதோடு இவருக்கு நாளுக்கு நாள் ஃபாலோயர்ஸ்களும் அதிகரித்து வருகின்றனர்.

    Serial Actor Indira Kumar: தமிழ் சீரியல் நடிகர் இந்திர குமார் தற்கொலை

    இதற்கிடையே தான் வளர்த்து வரும் நாய் குட்டியின் முதல் பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடியிருக்கிறார் ஷிவானி. வித விதமான 5 கேக்குகளுடன் தனது செல்லப்பிராணியின் பிறந்தநாளை சிறப்பித்திருக்கிறார். இதில் பிக் பாஸ் பிரபலங்கள் சம்யுக்தா, பாலா, ஆஜித் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: