’என்னோட பீஸ்ட் இது தான்’ கனவை நனவாக்கிய ஷிவானி! ரசிகர்கள் வாழ்த்து!

ஷிவானி நாராயணன்

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஷிவானி தனது கலர் ஃபுல்லான படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

 • Share this:
  சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் புதிதாக பி.எம்.டபிள்யூ காரை வாங்கியிருக்கிறார்.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். இதற்கிடையே பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற ஷிவானி மீது ஒரு வித எதிர்பார்ப்பு இருந்தது. இறுதி வாரம் வரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஷிவானி தனது கலர் ஃபுல்லான படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதோடு நடன வீடியோக்களையும் பகிர்ந்துக் கொள்கிறார். நண்பர்கள் மற்றும் தனது அம்மாவுடன் வெளியிடங்களுக்கு செல்லும் போது எடுக்கும் புகைப்படங்களை தவறாமல் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்.
  இந்நிலையில் தான் புதிதாக பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கியிருப்பதாக, புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார் ஷிவானி. அதற்கு ரம்யா பாண்டியன் தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். கூடவே ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை ஷிவானிக்கு தெரிவித்து வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: