சோஷியல் மீடியா மூலமாகவே இளசுகள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இஸ்டாகிராம், ட்விட்டரில் ஷிவானி போட்ட புகைப்படத்தை பார்த்து அடித்தது ஜாக்பாட். விஜய் தொலைக்காட்சியின் பகல் நிலவு சீரியல் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இன்ஸ்டாவில் 4 மணி ஷிவானி என்று இவருக்கு ரசிகர்கள் செல்ல பெயர் வைக்கும் அளவுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருக்கும் ஷிவானி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளித்திரையில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். இன்ஸ்டா மூலம் இவருக்கு சீரியலில் தான் வாய்ப்புகள் கிடைத்தன.
கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு , இரட்டை ரோஜா போன்ற சீரியலில் நடித்தவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததால் சீரியலை விட்டு விலகினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானியின் பெர்பாமென்ஸை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.ஆனால் கடைசியில் அப்படி எதுவும் நடக்கவில்லை. இவர் பாலாஜி முருகதாஸ் உடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அதற்கும் அவரின் அம்மா எண்டு கார்டு போட்டர். பிக் பாஸ் புகழுக்கு பிறகு ஷிவானிக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் தேடி வர தொடங்கின.
80களின் தேவதைகள்..தமிழ் சினிமாவின் எதார்த்த கதாநாயகிகள்
கமலின் விக்ரம் படம், வடிவேலு படம், ஆர்.ஜே பாலாஜி படம், பொன்ராம் படம் என அடுத்தடுத்த புக்கிங் ஷிவானி மற்றும் அவரின் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. அதிலும் குறிப்பாக விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவி ரோல் ஷிவானிக்கு மிகப் பெரிய ரீச்சை வாங்கி தரும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் 2 சீன்களில் மட்டுமே ஷிவானி திரையில் தோன்றினார். இதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மகனுக்காக பிரியாணி விருந்து போட்ட ஆல்யா - சஞ்சீவ் ஜோடி!
இன்ஸ்டாகிராமில் ஷிவானிடம் இதுக் குறித்து கேள்வி கேட்டுள்ள ரசிகர் “பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உங்களை லீட் ரோலில் பார்க்க விரும்பினோம். ஏன் இவ்வளவு சின்ன ரோலில் நடிக்கிறீர்கள். கதையை சரியாக தேர்ந்தெடுங்கள்’ என்று கூறியுள்ளார்.
அதற்கு ஷிவானி இப்போது பதில் கூறியுள்ளார். அதாவது “ சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ள சாதாரண பெண் தான் நான். இந்த இடத்தை அடைய பல தடைகளை தாண்டி தான் சென்றுள்ளேன். இது வெறும் ஆரம்பம் தான் இன்னும் நிறைய இருக்கிறது. எதையும் வகைப்படுத்த கூடாது கிடைத்த சின்ன ரோலில் கூட நான் என்னுடைய பங்களிப்பை எப்படி தருகிறேன் என்று தான் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.